பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 77

பிள்ளேயார் தம் தந்தையார்க்கு அறிவுறுத்தும் நிலேயி லும் அமைந்துள்ளமை காணலாம். தம் பொருட்டு எளிவந்தருளிய பிரம புரத்திறைவனே த் தம் தந்தை யார்க்கு அடையாளங்களுடன் சுட்டிக்காட்டக் கருதிய ஆளுடைய பிள்ளேயார், தன்னேரில்லாத் தலைவனுகிய அப்பெருமானேக்கண்டு உயிராகிய தாம்பெற்ற சிவா நு பவமாகிய காதலின் பத்தினே த் தமிழுக்கே யுரிய இனிய அகப்பொருட்டுறையான ன்றிப் பிறிதெவ்வாற்ருனும் சொல் லா ல் விளங்கச் சொல்லுதல் இயலாதெனத் துணிந்து எம்மை யிது செய்த பிரான் இவன்ைறே என இனிய அகப்பொருட்டுறையமைய இத் திருப் பதிகத்தினேப் பாடியருளினரென்பதும், இத் திருப் பதிகத்திலமைந்த அகப்பொருட் குறிப்பினைச் சிவபாத விருதயர் நன்கு ஒர்ந்துணர்ந்து கொண்டாரென்பதும்,

செம்மை பெற வெடுத்ததிருத் தோடுடைய செவியனெனும் மெய்ம்மை மொழித்திருப்பதிகம் பிரமபுரம் மேவினர் தம்மை யடையாளங்களுடன் சாற்றித் தாதையார்க் கெம்மை யிதுசெய்தபிரான் இவனன்றே எனவிசைத்தார். என வும்,

ஈறில்பெருந்தவம் முன் செய்துதாதை யெனப்பெற்ருர் மாறு விழுந்த மலர்க்கை குவித்து மகிழ்ந்தாடி வேறு விளேந்த வெருட்சி வியப்பு விருப்போடும் கூறு மருந்தமிழின் பொருளான குறிப்போர்வார்.

என வும் வரும் பெரியபுராணச் செய்யுட்களால் இனிது விளங்கும். உமையம்மையாரளித்த ஞானப்பாலேப் பருகிப் பாலருவாயராக நின்ற ஆளுடைய பிள்ளே யாரைக்கண்ட சிவபாதவிருதயர், எச்சில் மயங்கிட நினக்கு இதனே யி டாரைக் காட்டுக எனக் கையின் கண் சிறியதொரு பிரம்பினேக் கொண்டு ஒச்சு ம் நிலே யிற் பிள்ளேயார் முதன்முதற் பாடிய திருப்பதிகம் தோடுடைய செவியன் என்ற இதுவேயெனத் திருவெண்காட்டு அடிகள், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழாரடிகள் முதலிய பெருமக்கள் தெளிவாக அறிவுறுத்தியுள்ள மை இங்கு நினைக்கத் தகுவதாம்.