பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1055

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் ió39

சைவ சமயத்தில் இறைவனையடைதற்குரிய நெறி களக் கச் சரியை கிரியை யோகம் ஞானம் என நால்வகை நெறிகள் வகுக்கப் பெற்றுள்ளன. இந்நால் வகை நெறி களையும் படிகால் முறையாக மேற்கொண்டு ஞான நெறி யினைக் கடைப்பிடித்தொழுகும் சிவஞானிகள. கிய திருத் தொண்டர்கள் உலக மக்கள் உய்தல் வேண்டி மேற்குறித்த நால்வகை நெறிகளுள் ஒன்றினைத் தமக்குச் சிறபபுடைய வாழ்க்கை நெறியாக மேற்கொண்டு வாழ்ந்து காட்டிய வரலாற்ஜ நிகழ்ச்சிகளே ச் சேக்கிழாரடிகள் திருத்தொண்டர் புராணத்தில் விரித்துக்கூறியுள்ளார்.

' ஞானமுதல் நான்குமலர் நற்றிருமந்திரமாலே "

(பெரிய - திருமூலர் - 26) * நலஞ்சிறந்த ஞான யோகக் கிரியா சரியையெலாம்

மலர்ந்தமொழித் திருமூலர் " (பெரிய - திருமூலர் - 28, என வரும் தொடர்களில் ஞான நெறியினை அடிப்படை யாகக் கொண்டு நிகழும் சரியை கிரியை யோகம் ஞானம் எனும் சிறப்புடைய நால்வகை நெறிகளையும் குறித் துள்ளமை காண்க.

வேதசிவாகமங்களிலும் தேவார திருவாசகம் முதலிய அருள் நூல்களாகிய திருமுறைகளிலும் நிரம்பிய பயிற்சி யும் ஈடுபாடும் உடைய சேக்கிழார் அடிகள், வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்கத் தாம் இயற்றிய காப்பியத்தில் உலகியல் வேதநூலொழுக்கமாகிய வைதிக நெறியையும் அதனினும் சிறப்புடையதாகத் தமிழ்ச் சான் ருேர் களால் பன்னெடுங்காலமாகப் பேணி வளர்க்கப் பெற்று என்றும் நின்று நிலவும் பெருமை வாய்ந்த மெய்ந் நெறியாகிய சிவநெறியினையும் அந்நெறிகளில் வழுவா தொழுகிச் சிவபெருமான் திருவருளுக்குரியராகிய ஆளு டைய பிள்ளையர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர், திரு மூலர், காரைக்காலம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சே மான்பெருமாள் நாயனர் ஆகிய அருளாசிரியர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளிலும் ஏனைய திருத்தொண்டர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளிலும் வைத்து இனிது விளக்கி யுள்ளார்.

தமிழகத்திற் சைவ சமயச் சான்ருேர்களால் இறைவன் திருவருள் கொண்டு போற்றி வளர்க்கப் பெற்ற சைவ