பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1068

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105? பன்னிரு திருமுறை லசவாறு

துள்ள சொல்வனப்பு நல்லிசைப் புலவர்களால் வியந்து பாராட்டுதற்குரியதாகும். காப்பியத்தைப் பயில்வோ ருள்ளத்தில் அதிர்ச்சியை விளக்கும் துன்ப நிகழ்ச்சிகளைக் கூறுமிடத்து,

பவ்வத்தில் மன்னவன் சொன்னபடி முடித்தனர் அப்பதகள் :

திருதாவுக் 124; பத்திரம் வாங்கித் தான்முன் நினைத்த அப்பரிசே செய்ய

(மெய்ப் - 15} முன்னின்ற பாதகனுந் தன் கருத்தே முற்றுவித்தான் '

{ஏ குதி - 4) என மங்கல மொழியால் மறைத்துக் கூறுதல் ஆசிரியரது மொழித் திறத்தினை நன்கு விளக்குவதாகும்.

அசைவில் செழுந்தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்ல 'த் தோன்றிய இக்காப்பியத்தில் தமிழ் மக்களின் சென்ற காலத்தின் பழுதில:த் திறமும் இனி எதிர்காலத்தின் சிறப்பும் ஆகியவற்றை வரலாற்று முறை யில் உணர்ந்து நிகழ்காலச் சமுதாயத்தைத் திருத்தி அமைத்துக்கொள்ளுதற்கேற்ற உயர்ந்த கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

தெய்வம் உண்டெனத் தெளிந்த நல்லறிஞர்கள் எத்துணையிடர்கள் அடுக்கி வந்தாலும் வாழ்க்கையில் பிறர் யார்க்கும் அடிமைப்படாது எவ்வுயிர்க்கும் முதல்வனுகிய இறைவன் ஒருவனுக்கே தொண்டுபட்டு வாழும் உரிமை யுணர்வும், தொழில்களில் உயர்வு தாழ்வு கருதாமையும், தாம் பல்வேறு தொழில்களைச் செய்தும் அவற்ருவ்வரும் ஊதி யத்தைத் தமக்கென வைத்துக்கொள் ளாமல் அரனடியசர் களாகிய அன்பர்களுக்கு ஈந்துவக்கும் மகிழ்ச்சியும், என் கடன் பணி செய்து கிடப்பதே ' என்னும் உயர்ந்த நோக் கத்துடன் வாழ்க்கையில் தாம் கொண்ட குறிக்கோளை உயிரைக் கொடுத்தாயினும் நிறைவேற்றும் உள் ளத்து உரனுடைமையும், நேயமலிந்த அடியார்களே இறைவ னெனவே தெளிந்து வழிபடும் தெளிவுடைமையும், இன்னு செய்தார்க்கும் இனியவே செய்யும் சால்புடைமையும். இவ்வுலகியலில் நேரும் இடர்களுக்கு உறுதுணையாக இறைவனுளன் என உளம்பொருத்தி இன்ப துன்பங் கன ஒப்ப அனுபவிக்க இசையும் மன அமைதியும்,