பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1069

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 重酸器翁

அமைதி முறையில் நின்று உண்ணுமை முதலிய நோன்பு களால் உலகில் தீமைகளை எதிர்த்து விலக்கும் திறமும், தவறு செய்வோர் யாவராயினும் விருப்பு வெறுப்பின்றி ஒப்பநாடி அதற்குத் தக ஒறுக்கும் உளத்திட்பத்தினைக் குடிமக்கள் அனைவருள்ளத்திலும் நிலைபெறச் செய்யும் வன்மையும், உலகியலிற் பொருளாட்சி யொன்றையே பெரிதென மதியாது அருளாட்சியே சிறந்ததென நிலை நாட்டும் ஆற்றலும், வாழ்வெனும் மையல் விட்டு வறுமை யாம் சிறுமை நீக்கிக் குலப்பிரிவுகளாலும் செல்வ வறுமை களாலும் வேறுபடாது ஒன்றே குலனும் ஒருவனே தேவனும் எனவுணர்ந்து எவ்வுயிர்க்கும் நன்றே புரியும் சமநிலைச் சமுதாயத்தை நாட்டில் உருவாக்கும் நெறிமுறை களும், யாவருடனும் உயர்வாகவும் இனிமையாகவும் உரை யாடும் மொழித்திறமும், குமரி முதல் இமயம் வரை பரவி யுள்ள நம் நாட்டில் வடக்குந் தெற்கும் ஒத்த தகுதியுடை யனவே எனக்கருதி யொழுகும் ஒருமைப் பாட்டுணர்வும், நாட்டுமக்கள் தமது உலகியற் போகத்தில் நாட்டங் கொண்டு தத்தமக்குரிய கொள்கைகளை மாற்றிக்கொள் ளாமல் தமக்குரிய மொழி, சமயம் ஆகியவற்றைப் பேணிப் போற்றுமுகத்தால் மற்றவர்கள் மதிக்க வாழ்தல் வேண்டும் என்னும் ஊக்கமும், அரசியல் வளர்ச்சிக்குரிய நீதிகளும், சமய நிந்தனையின்றி எல்லாச் சமயங்களும் தத்தம் வரம் பில் நின்று வளர்தற்கு இடந்தரும் முறையில் அரசியல் ஆட்சி அமைதல் வேண்டும் என்பதும், நல்லோர் திருக் கூட்டம் நாட்டைத் திருத்தி நலம் வழங்கும் என்பதும் ஆகிய உயர்ந்த உண்மைகள் பல இக்காப்பியத்தில் நன்கு விளக்கப்பெற்றுள்ளன.

மக்களது மொழித்திறத்தால் அவர்களது வாழ்க்கை திருந்துதல் உண்டென்பதனைத் திருநீலகண்டக் குயவ நாயனர் புராணத்தில் ஆசிரியர் இனிது விளக்கி யுளளாா.

  • எம்மைத் தீண்டுவீராயின் திரு நீலகண்டம் : எனத் தம் மனைவியார் கூறிய திருவருள் ஆணைக்கு அடங்கி,

எம்மை என்ற தகுல் மற்றைமாதரார் தமையும்

என்றன் மனத்தினும் தீண்டேன்’