பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1076

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鑫

லும் அவர்க்கு அருள்புரியும் திலவில் இறைவன் அம்மை யப்பராக விடை மீது எழுந்தருளிக் காட்சி நல்குதல் ஆகிய சிறப்புடைய நிகழ்ச்சியும் இடம் பெற்றிருத்தலே யும் இச் சிற்பங்களிற் காணலாம். திருத்தொண்டத் தொகை யிற் போற்றப் பெற்றுள்ள அடியார் வரலாறுகளிற் சிறப் புடைய வரலாற்று நிகழ்ச்சிகளே உருவாக்கிக் காட்டும் முறையில் அமைந்த இச் சிற்பங்கள் சேக்கிழாசடிகள் அருளிய திருத்தொண்டர் புராணம் கிய சொல்லோவியத் துடன் ஒருங்கு வைத்துணரத் தக்க கல்லோவியமாகத் திகழ்கின்றன.

திருத்தொண்டத் தொகையடியார்களைக் குறித்த இச் சிற்பங்களின் நிழற் படங்கள் தில்லை வாழத்தனர் முதலாக உடைய நம்பியாகிய கந்தரமூர்த்தி நாயனுர் ஈருக முதல் 72 முடியவுள்ள எண் வரிசையில் வெளியிடப் பெற்றுள்ளன வாதலின் அச்சிற்பங்களுக்குரிய விளக்கங்கள் 1 முதல் 72 முடியவுள்ள எண் வரிசையிற் பின்வருமாறு குறிக்கப் பெறும். குறித்த எண்முறைப்படி யுள்ள இவ்விளக்கக் குறிப்புக்களையும் இக் குறிப்புக்களுக்குரிய எண்வரிசையி லுள்ள நிழற் படங்கனையும் முறையே ஒப்ப வைத்துனரு மிடத்து இச்சிற்பங்களே அமைத்த சிற்பியின் வரலாற் துணர்வும் கலைத்திறமும் இவற்றை முன் னின்று அமைக்க அறிவுறுத்திய சோழ மன்னனது சிவநெறிப்பற்தும் இனிது விளங்கும்.

  • . தில்லைவாழந்தனர் :

இராச ராசபுரத் திருக்கோயில் வியானத்தின் வெளிப் புறத்தில் அடிப்பக்கத்துப் பட்டியல் பகுதியில் தென் கீழ் முனையிலிருந்து தொடங்கி வடகீழ் முனையில் முடியும் திருத்தொண்டத் தொகையடியார்களின் சிற்ப வரிசையில் தென்கீழ் முனையில் முதலாவதாக அமைந்தது, தில்லை வாழந்தணர்க்குரிய சிற்பமாகும். இதன் கண் வலமிருந்து இடம் முதற்கண் கோயிலும், அதனை நோக்கி முறையே குடையும் சமரையும் திருவமுதும் தாங்கி நிற்கும் நிலையில் முந்நூலணித்த அந்தணர் மூவரும் உள்ளமை காணலாம்.

பொங்கிய திருவில் நீடும் பொற்புடைப் பணிகள் ஏத்தி

மங்கல்த் தொழில்கள் செய்து மதைகrசல் துதித்துமத்தும்