பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

மூன்ருமவர் வலக்கை ஞான முத்திரையுடன் மார்பில் அணைய இடக்கை தொடைமீது விளங்கத் தியானத்தில் அமர்ந்துள்ளார். நான்காமவர் இரு கைகளையும் தலைமேற் குவித்து வழிபடுகின் ருர். ஐந்தாமவரும் ஆருமவரும் இரு கைகளையும் குவித்து நெஞ்சொடு பொருந்த வைத்து வணங்குகின்ருர்கள். ஏழாமவர் சிவலிங்கத்தினை நெற் றிக்கு நேரே வைத்து வழிபடுகின் ருர். எட்டாமவர் சிவலிங்கத்தினை நெஞ்சுக்கு நேரே வைத்து வழிபடு கின் ருர், ஒன்பதாமவர் தலைமேல் இரு கைகளை யும் குவித்து நின்றும் பத்தாமவர் நெஞ்சுக்கு நேரே இரு கைகளையும் குவித்து நின்றும் வணங்குகின்ருர்கள்.

திருநாவுக்கரசர் பத்துக்கொலசம் அடியார் செய்கை தானே எனப் பத்தர்க்குரியனவாகக் குறித்த பத்துச் செய்கைகட்கும், சேக்கிழசரடிகள் பத் தராய்ப்பணிவார் புராணத்துன் பத்தர்க்குரிய இயல்புகளாக விரித்துக் கூறிய வற்றுக்கும் இச்சிற்பத்தில் அமைக்கப்பெற்ற பத்தர் திருவுருவங்கள் பத்துக்கும் அமைந்த தொடர்பினை ஒப்பு நோக்கியாராய்தல் அறிஞர் கடகுைம்.

59, 59 A. பரமனையே பாடுவார் :

59-ஆம் படத்தில் நந்தியும் கோயிலும் அமைந்திருத் தலும், (59 A - படத்தில் நந்தியின் பின்னே கோயில் முறறத்தில் இசைவல்லார் மூவர் ஒருங்கு அமர்ந்திருந்து தாளமிட்டுப் பாடுதலும் காணலாம். இச்சிற்பத்தில் பரமனேயே பாடுவார்க்கு மூன்று உருவங்கள் அமைக்கப் பெற்றிருத்தலின் நோக்கம், இசை பாடும் அடியார்கள், தமிழ்ப் பாடல்களையும் :-மொழிப் பாடல்களையும் இந் நாட் டில் வழங்கும் பிற திசைமொழிப் பாடல்களையும் பாடும் நிலையில் மூவகையின. க இருத்தலால் சிவனடி பரவும் தெய்வ இசையினைக் கற்றுவல்ல இம்மூவகையினரும் பரமனையே பாடுவார் என்னும் திருக்கூட்டத்தினராகவே போற்றப் பெறுவர் என்பது அறிவித்தற்பொருட்டெனக் கொள்ள வேண்டியுளது இந்நுட்பம்,

  • தென்றமிழும் வடகலையும் தேசிகமும் பேசுவன

மன்றினிடை நடம்புரியும் வள்ளலேயே பொருளாக ஒன்றியமெய் யுணர்வோடும் உள் ளுருகிப் பாடுவார் பன்றிவுடன் புட்காளுப் பரமனேயே பாடுவார் ”