பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

(2) உடைய கம்பிக்கு ஆவண ஒலை காட்டினபடி :

நம்பியாரூரர்க்கும் புத்துணர்ச் சடங்கவி சிவாசாரியார் திருமகளார்க்கும் திருமணம் நிகழவிருக்கும் திருமணப் பந்தரிலே சிவபெருமான் கிழவேதியர் வடிவுடன் வந்து அங்குள்ள அந்தணர்களை நோக்கி நாவலாருரளுகிய இவன் என் அடியான் ' என்று கூற, அம்மொழியினைக் கேட்டு நகைத்த நாவலூரரை நோக்கி, ஏடன், அக்காலம் உன் பாட்டன் எழுதிக்கொடுத்த அடிமைச் சீட்டாகிய ஆவண ஒலை இதுவாகும் ' எனக் காட்டிய நிகழ்ச்சியைக் குறிக்கும் முறையில் அமைந்தது இச்சிற்பமாகும். இதன் கண் வலமிருந்து இடம் : இடக்கையில் குடையினைப் பிடித்து நிற்கும் கிழவேதியர் தம் வலக்கையில் உள்ள ஆவண ஒலையைக் காட்டுதலும், அது கண்டு திகைப்புற்று நிற்கும் நம்பியாரூரர்க்குப் பின்னே மறையோர் இருவர் அமர்ந்திருத்தலும் காணலாம்.

(3) உடைய நம்பியை ஆண்டுகொண்டருளினபடி :

திருவெண்ணெய் நல்லூர்ச் சபையில் வாயாடி வழக்கில் வென்ற கிழவேதியர், " உமக்கு இவ்வூரில் வரு முறை மனையும் நீடுவாழ்க்கையும் காட்டுக" என்ற வெண் ணெய் நல்லூர்ச் சபையாரை நோக்கி, ' என்னை நீவிர் ஒருவரும் அறியீராகில் என்னுடன் வம்மின் ' என அழைத்துச் சென்று திருவருட்டுறைக் கோயிலிற் புக்கு மறைந்து, ஆரூரனே ! நீ முன்பு நமக்குத் தொண்டன் ; நின்னுள்ளத்தில் வேட்கை மிக்கெழுந்தமையால் பின்பு நம் ஏவலாலே மண்ணின்மீது பிறந்தனை நின்னை மேலும் பாசத் தொடர்பு பற்ருதவாறு மறையேசர் முன்னிலையில் நாம் தடுத்து ஆட்கொண்டோம் ; நமக்கு அன்பின் விருப் புடைய வழிபாடு இசைப் பாடலாற் பரவிப் போற்றுதலே. ஆதலால் சொற்றமிழ் பாடுக என அருள் செய்யக் கேட்ட வன்ருெண்டர், அருட்டுறைப் பெருமானைப் பித்தா பிறை சூடி என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகத்தைப் பாடிப் போற்றுதலைக் குறிப்பது இச்சிற்பமாகும். இதன் கண் இட மிருந்து வலம் : திருவெண்ணெய் நல்லூர்த் திருவருட்டு றைக் கோயிலையும், அதன்முன் திருவெண்ணெய் நல்லூர்ச் சபை அந்தணர் இருவருடன், நம்பியாரூரர் இன்னிசைப் பதிகத்தினைப் பாடி நிற்றலையும் காணலாம். நம்பியாரூரர்