பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரிசைகளாக இடம் பெற்றிருத்தல் காணலாம். இல் வரிசைகளின் தொடர்பாக அமைந்த பிற்பகுதி பிற் காலத்தில் மதிலையொட்டித் தடுக்கப்பட்டுள்ள அறையின் குறுக்குச் சுவரால் மறைக்கப்பட்டிருத்தலால் சுவரின் வடபுறத்தேயுள்ள சிற்பவரிசைகளைப் படம் எடுக்க இயல வில்லை. இச்சிற்பங்களின் தொடக்கமாக வெளிப்படை யாகத் தெரியும் சிற்பங்களின் நிழற்படம் இந்நூலில் இராசராசபுரச் சிற்பங்களை படுத்துத் தரப் பெற்றுளது. அதன்கண் திருத்தொண்டத் தொகையிற் போற்றப் பெற்ற சிவனடியார்களில் இருபத்தைந்து அடியார்களின் வரலாற்றுச் சிற்பங்கள் மூன்று வரிசைகனாக அமைத் துள்ளமை காணலாம்.

மேல் வரிசையில் இடமிருத்து வலம் : முதற்கண் அமர்ந்திருக்கும் நிலையில் உள்ள அந்தணர் மூவருடைய திருவுருவங்கள் தில்லை மூவாயிசவராகிய தில்லே வாழத் தணரைக் குறிப்பன. அடுத்துக் கோல்பிடித்துக் குளத்தில் மூழ்கி இளமை பெற்று எழுந்து இறைவனேக் கைகுவித்து இறைஞ்சும் நிலையில் திருநீலகண்டக் குயவகுரும் அவர் தம் மனைவியாரும் நிற்றல் காணலாம். அடுத்துச் சிவனடி யார் ஒருவர் அமர்ந்திருக்க அவர் அருகே இயற்பகையார் மனைவியாரும் இயற்பகையாரும் கைகுவித்து அமர்ந் துள்ளனர். அடுத்துக் கூடையுடன் அமர்த்திருக்கும் நிலையில் அமைந்தசிற்பம், வயலில் முளைவாரி வந்த இளையான்குடி மாற நாயனுரைக் குறிப்பதாகும் அடுத் துள்ள சிற்பத்தில் கையில் புத்தகக் கட்டுடன் சிவனடியார் வடிவில் முத்தநாதனும் அருகே கைகுவித்து வணங்கும் நிலையில் மெய்ப்பொருள் நாயனுரும் உள்ளனர் அவரை யடுத்து அமர்ந்திருப்பவர் விறன் மிண்ட நாயஞராவர்.

கடு வரிசையில் இடமிருந்து வலம் : முதற்கண் கைகுவித்து நிற்பவர் திருநாளைப் போவார். அடுத்துச் சிவனடியாராக வந்து உடையினைத் துவைக்கக் கொடுத்து, அதனைத் தருக என வேண்டி நிற்கும் இறைவனது திருவுருவமும், குறித்த காலத்தில் கொடுக்க இயலாமை யால் தம் தலையினைப் பாறையில் மோதப் புக்க திருக்குறிப்புத் தொண்டர் திருவுருவமும் அமைந்திருத்தல் காணலாம். அதனை அடுத்து அமைந்தது சண்டேசர் வரலாருகும்.