பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|

திருவாசகம் 137 துப்பனே சுடர் முடியனே துணையாளனே

தொழும்பாள ரெய்ப்பினில் வைப்பனே என வைப்பதோ சொலாய் நையவையகத்

தெங்கள் மன்னனே. எனவருந் திருப்பாடல், அடிகள் பெற்ற ஆனந்தாதீத நிலை யினைக் குறித்தல் அறியத்தக்கதாகும்.

- சு. நீத்தல் விண்ணப்பம்

திருப்பெருந்துறையில் ஆசிரியத் திருே எழுந்தருளியிருந்து வாதவூரடிகளே ஆட்கொண்டருளிய சிவபெருமான், இன்னும் சிலநாள் இங்கிருப்பாய் ' எனக் கூறி மறைந்தனளுக, ஆசிரியனது பிரிவாற்ருது மனங் கலங்கிய அடிகள், இறைவன் பணித்தவண்ணம் திருப்பெருந் துறையிலிருந்து திருவுத்தரகோசமங்கையை அடைந்து திருக்கோயிலிற்புகுந்தவர், தம்மை ஆண்டுகொண்டருளிய ஆசிரியத்திருமேனியைக் காணப் பெருராய்ப் பெரிதும் வருந்தி, உத்தரகோசமங்கைக்கு அரசே, அடியேனைக் கை விட்டு விடுவாயோ ? என நெஞ்சம் நெக்குருகி நின்று நீத்தல் விண்ணப்பம் என்னும் பனுவலைப் பாடிப் போற்றி ஞர் என்பதும், அந்நிலையில் உத்தரகோசமங்கைப்பெருமான்

அடிகட்கு ஆசிரியத் திருக்கோலத்தைக் காட்டி அருள்புரிந்

தான் என்பதும் வரலாறு. இச்செய்தி,

  • உத்தரகோச மங்கை யூரினிற் சென்று புக்கார் . எனவும்,

சடையவர் கோயிலெய்தித் தம்மைவத் தடிமைகொண்ட வடிவது காணுராகி மயங்கி வெய்துயிர்த்து வீழ்ந்து

விடுதிகொல்என் ை என்று, நீத்தல் விண்ணப்பம் என்னும் தொடைகெழு பாடல் ஒதக் காட்டினுள் தொல்லைமேனி

எனவும் வரும் திருவாதவூரடிகள் புராணத்தால் அறியப் படும்.

நீத்தல் விண்ணப்பமாகிய இப்பனுவல், கட்டளைக் கலித் துறையாக அமைந்த ஐம்பது திருப்பாடல்களை உடையது; ஒரு பாடலின் இறுதி அடுத்த பாடலுக்கு ஆதியாக அமையக் * கடையவனே?ன எனத் தொடங்கி அமுதுண்ணக்கடைய வனே என மண்டலித்து முடிந்துளது. நின்திருவடிக்கச் தொண்டுபட்ட என்னைக் கைவிட்டு விடுதலாகாது வாதவூரடிகள் ஆண்டவனை நோக்கி வேண்டிக்கொள்

缘 ,