பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 13;

தோன்ற நிற்கும் நிலையினை அடிகள் தமது அநுபவத்தின் துணைகொண்டு உணர்த்தும் முறையில் அமைந்தது, உயிருண்ணிப்பத்து என்பதாகும்.

  • தழைத்துவளர் பேரின் பந் தாணுகி யுயிர்தோன் ருத்

தன்மையாய்த் துன்பு ஒழித்து நிறைவைப் பெறுதல் உயிருண்ணிப்பத் தாய் இங்கு

உரைத்ததாமே ” என இப்பதிகத்தின் பொருளமைதியினைத் திருப்பெருந் துறைப் புராணம் விளக்குதல் காணலாம். இப்பதிகத்திற்குச் சிவானந்தம் மேலிடுதல் - நேயம் மேலிடுதல்’ என முன்ளுேர் கருத்துரைத்தனர்.

சிவானந்த மேலீடாகிய இந்நிலையினை “இன்பேயருளி எனையுருக்கி உயிருண்கின்ற எம்மானே" (எண்ணப்பதிகம்-3) என்ற தொடரில் அடிகள் சுட்டியருள்கின்ருர், சிவபெருமான், தமது ஆருயிரை அகத்திட்டுக் கொண்டருளிய திறத்தை ஊனுருடல் புகுந்தான் உயிர்கலந்தான் உளம்பிரியான் ' எனவும், எனத் தான் புகுந்து ஆண்டான் எனது என்பின் புரையுருக்கி... மனத்தான் கண்ணினகத்தான் மறுமாற்றத் திடையானே' எனவும், கடலின் திரையதுபோல்வரு கலக்க மலமறுத்தென், உடலும் எனதுயிரும் புகுந்து ஒழியா வண்ணம் நிறைந்தான் எனவும் வரும் தொடர்களில் அடிகள் தெளிவாகக்குறித்துள்ளமை காணலாம். இறைவன் தன் பேரருளால் என்னகத்து நிலைபெற்று, என்னைப்பற்றிய பாசப்பிணிப்பெலாம் அகல என்னுடன் வேற்றுமையின்றித் தோன்றுதலால் யாளுகி நின்ருன்’ என்பார், “திருப்பெருந் துறையுறைவான் நிச்சம் என நெஞ்சின் மன்னி யானுகி நின்ருனே' எனத் தமது சிவாநுபவ மேலிட்டினை அடிகள் புலப்படுத்தியதிறம் உய்த்துணரத் தக்கதாகும்.

சிவதீக்கையுற்றுத் தன்னையும் தலைவனையும் உணர்ந்து சிவோகம் பாவனையைத் தலைப்பட்ட உயிரிற் சிவபெருமான் பிரிவற உடனியைந்து ஒன்ருய் நிற்கும் இப்பெற்றியின.

அரக்கொடு சேர்த்தி அனைத்த அக் கற்போல் உருக்கி உடங்கியைந்து நின்று - பிரிப்பின்றித் தானே உலகாம் தமியே னுளம் புகுதல் யானே உலகென்பன் இன்று ”

(சிவஞான போதம் சூ 2. அதிகரணம் 1.)

எனவரும் சிவஞானபோத உதாரண வெண்பாவிாலும்,