பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 爱盛篮

இதன் இரண்டாந் திருப்பாடலில் கன்றை நினைந்தெழு தாயெனவந்த கணக்கது வாகாதே’ என்ற தொடர்,

  • மன்று நிறைந்தது மாபர மாயது

நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும் கன்று நினைந்தெழு தாயென வந்தபின் குன்று நிறைந்த குண விளக்காமே (திருமந்திரம் 2446) எனவரும் திருமூலர் வாய்மொழியையும், ஐந்தாந் திருப் பாடலில் வரும் கண்ணலி காலம்’ என்ற தொடர், கால னென்னுங் கண்ணிலி (புறம் - 240) என்ற தொடர்ப் பொருளையும் அடியொற்றி அமைந்திருத்தல் இங்கு அறியத் தக்கதாகும்.

டு). ஆனந்தமாலை ஆரா அன்புடைய மெய்யடியார்களுடன் கூடிப் பெருமா னது பேரானந்தத்துப் பிரியாதிருக்கப்பெறும் இன்பத்தின் இயல்பினை விரும்பியுரைப்பதாதலின், இஃது 'ஆனந்தமாலை' என்னும் பெயருடையதாயிற்று. மாலே - இயல்பு. மாலை இயல்பே (தொல்-சொல்-உரி-15) என்பது தொல்காப்பி யம். சிலப்பதிகாரத்தில் உள்ள துன்பமாலை என்னும் தலைப்பினைப் போன்று இன்பத்தின் இயல்பினை விளக்கும் இப்பனுவல், ஆனந்த மாலை என்ருயிற்று, இதற்குச் சிவா நுபவ விருப்பம் என முன்னேர் கருத்துரை வரைந்தனர். "மோகமிகும் அடியரொடுங் கூட விரும்பியது ஆனந்தம் " என்பது திருப்பெருந்துறைப் புராணம்.

ஆனந்த மாலை ஏழு திருப்பாடல்களை உடையது. இதன் முதற்பாடலாக அமைந்தது.

" மின்னே ரனைய பூங்கழல்கள் அடைந்தார் கடந்தார்

வியனுலகம்

பொன்னே ரனைய மலர் கொண்டு போற்ரு நின் ருர்

அமரரெல்லாம்

கன்னே ஏனைய மனக்கடையாய்க் கழிப்புண் டவலக்

கடல்வீழ்ந்த என்னே ரனையேன் இனியுன்னைக் கூடும்வண்ணம்

இயம்பாயே" எனவரும் திருப்பாட்டாகும். மின்னே ரனைய பூங்கழல் எனத்தொடங்குவதுபற்றி, இம் முதற்குறிப்பினையே இப் பதிகத் தலைப்பாகக் குறித்தலும் உண்டு.