பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

பன்னிரு திருமுறை வரலாறு


இனி உன்னைக் கூடும்வண்ணம் இயம்பாயே' எனவும், பன்னுளுன்னைப் பணிந்தேத்தும் பழைய அடியரொடுங் கூடாது, என் நாயகமே பிற்பட்டிங்கிருந்தேன் நோய்க்கு விருந்தாயே" எனவும், கோலங்காட்டி ஆண்டானைக் கொடி யேன் என்ருே கூடுவதே எனவும் வரும் தொடர்கள், அடியார்கள் பலரும் இறைவனைத் தலைப்பட்டு இன்புற, அவ் இன்பப்பேற்றில் திளைக்கும் நிலையை அவாவிய திருவாதவூ ரடிகளது சிவாநுபவ விருப்பத்தினை நன்கு புலப்படுத்துவன வாகும்.

" நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்துப் பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்சதேற்றும் பெருந்

துறையாய் அரியபொருளே அவிநாசியப்பா பாண்டி வெள்ளமே தெரியவரிய பரஞ்சோதி செய்வதொன்றும் அறியேனே " எனவரும் திருப்பாடல், திருவாதவூரடிகள் பெற்ற பேரின்ப மாகிய ஆனந்த வெள்ளத்தின் இயல்பினைப் புலப்படுத்தல் &Tâû &jss is ,

சிலமின்றி நோன்பின்றிச் செறிவேயின்றி யறிவின்றி என்ற தொடர், செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து, ஆற்றின் அடங்கப்பெறின் (123) எனவரும் திருக்குறள் அடியொற்றி அமைந்திருத்தல் அறியத்தக்கதாகும்.

டுக. அச்சோப்பதிகம்

யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையாளுகிய சிவ பெருமான், தம்பொருட்டு எளிவந்தருளிய பேரருளின்பத்தில் திளைத்து மகிழும் திருவாதவூரடிகள், தாம் பெற்ற அருளா ரின்பத்தை வியந்து போற்றுவதாக அமைந்தது அச்சோப் பதிகமாகும். அச்சோ என்பது வியப்பினைப் புலப்படுத்தும் இடைச்சொல். இப்பதிகப்பாடல்கள்தோறும் இறைவன் எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே என அடிகள் தாம் பெற்ற சிவாநுபவத்தை வியந்து போற்றி மகிழ்தலால், இஃது அச்சோப்பதிகம் என்னும் பெயர்த்தா யிற்று. இஃது அச்சோப்பத்து எனவும் சில சுவடிகளிற் குறிக்கப்பெற்றுள்ளது. எனினும் பழைய சுவடிகளில் இப் பதிகத்திற்குரியனவாக ஒன்பது திருப்பாடல்களே காணப் படுதலால் அச்சோப்பதிகம் என்ற பெயரே பொருத்தமுடைய தாகத் தெரிகிறது.