பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

பன்னிரு திருமுறை வரலாறு


ஒத்த அன்பினராய தலைமக்களது உள்ளத்துயர்ச்சி யைப் புலப்படுத்தும் அகனைந்திணை யொழுகலாற்றினைக் கற்றவர்களே யன்றி மற்றவர்களும் எளிதின் உணர்ந்து போற்றும் வண்ணம் இசைநலம் வாய்ந்த கட்டளைக் கலித் துறையாப்பினுல் கோவைபாடும் முறை கி. பி. ஏழாம் நூற்ருண்டில் தோன்றியதெனத் தெரிகிறது. இங்ங்னம் தோன்றிய அகத்திணைக் கோவைகளுள் பாண்டியன் அரி கேசரியைப் பாட்டுடைத் தலைவனுகக் கொண்டு பாடப் பெற்ற பாண்டிக் கோவையும் தில்லைச் சிற்றம்பலவளுகிய இறைவனைப் பாட்டுடைத்தலைவனுகக் கொண்டு மாணிக்க வாசகப் பெருமான் திருவாய் மலர்ந்தருளிய இத் திருச் சிற்றம்பலக் கோவையும் மிகவும் தொன்மை வாய்ந்தன வாகும். இவ்விரண்டினுள்ளும் அகத்திணைக் கோவை என்பது நானூறு துறைகளையுடையது' என்னும் இவ் வரையறைக்கமைந்த இலக்கியமாக முதன்முதல் இயற்றப் பெற்ற அகத்திணைக் கோவை திருச்சிற்றம்பலக் கோவையே யாகும்.

இறையனர் களவியலுரையில் விரித்துரைக்கப்படும் துறைகட்கு இலக்கியமாக அந்நூலில் உரையாசிரியராற் காட்டப்பெறும் மேற்கோட் செய்யுட்களில் கட்டளைக் கலித் துறையாப்பிலமைந்த கோவைச் செய்யுட்கள் 326-ம் பாண்டிக்கோவை என்ற பெயரால் வழங்கப் பெறுகின்றன. இப்பாடல்களிற் சிறப்பித்துப் போற்றப்பெறும் பாட்டுடைத் தலைவன் மாறவர்மன் அரிகேசரி என்னும் சிறப்புப் பெயருடையவனும் நெல்வேலிப் போரில் வெற்றிபெற்றவனு மாகிய நின்ற சீர்நெடுமாறனவன். இவ்வேந்தன் திருஞான் சம்பந்தர் காலத்துப் பாண்டியமன்னன் என ஆராய்ச்சி யாளர் கூறுவர். களவியலுரையில் மேற்கோளாகக்காட்டப் பெற்றுள்ள பாண்டிக் கோவைப்பாடல்களுள் ஒருதுறைக்கே ஒன்றுக்கு மேற்பட்ட பாடல்கள் உள்ளன.

பாண்டிக்கோவைச் செய்யுட்களாக 326 பாடல்கள் களவியலுரையிற் காணப்படினும் அப்பாடல்களால் விரித் துரைக்கப் பெறும் அகத்துறைகள் 175 துறைகளே யாகும். தொல்காப்பியத்திலோ இறையனர் களவியலிலோ அகத் திணைத்துறைகள் நானூறு என்னும் இவ்வரையறை இடம் பெறவில்லை. இறையனர்களவியலுரை நக்கீரனுர்முதலாக முசிறியாசிரியர் நீலகண்டனர் வரை வந்த ஆசிரியர் பரம்