பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை 器棘

LSTಷ್ಣ @ఙr3ఖrā அறிவுறுத்தப்பெற்று வழங்கிவந்து. முடிவில் இப்பொழுதுள்ளவாறு எழுத்துருவமைந்தகாலம் கி. பி. எட்டாம் நூற்ருண்டென்பர் அறிஞர். களவியலுரை எழுதப்பெற்ற இக்காலப்பகுதியை அடுத்துத் தோன்றியவர் திருவாதவூரடிகளாவர். ஆகவே அவ்வாசிரியர் தொல் காப்பியத்திலும் இறையனர் களவியலுரையிலும் விரித் துரைக்கப்பெறும் அகத்தினைத்துறைகளை அடியொற்றி மேலும் பல அகத்துறைகளையமைத்துத் தாம்பாட எடுத்துக் கொண்ட திருச்சிற்றம்பலக் கோவையினை நானூறு துறை களே யுடைய அகப் பொருட் கோவையாக அழகுற இயற்றி யுள்ளார். களவியலுரையில் உரையாசிரியர் மேற்கோள் காட்டி விளக்கிய துறைகளேயன்றி அத்துறைகளின் தொடர்புடைய செயலாக அந்நூலுரையிற் குறிக்கப்பெற்ற நிகழ்ச்சிகள் சிலவும் இத்திருக்கோவையில் வாதவூரடிகளால் தனித்துறைகளாக வகுக்கப் பெறுவனவாயின. இறையனர் களவியல் ஒன்பதாம் சூத்திரவுரையில், 'மதியுடம் படுத்துத் தன்கருத்தறிவித்துப் பின்னத் தழையும் கண்ணியும் கொண்டு பின்னிற்கும்” எனவரும் உரைத் தொடரினை அடியொற்றி மதியுடம் படுத்தலின் இறுதியில் கருத்தறி வித்தல்' என்னும் துறையினை அடிகள் அமைத்துள்ளமை காணலாம். -

இவ்வாறு அகத்தினையொழுகலாற்றினை நானுறு துறைகளாக வகுத்தமைத்துப் பொருட்டொடர் நிலையாக நானூறு செய்யுட்களால் முதன்முதற் கோவை பாடியவர் திருவாதவூரடிகளேயாவர். அடிகள் தாம் பாட எடுத்துக் கொண்ட அகப்பொருட் கோவைக்கு நானூறு என்னும் பாடற்ருெகையினைத் தேர்ந்து கொண்டமைக்கு நற்றிணை நானூறு, குறுந்தொகை நானூறு, நெடுந்தொகை நானூறு என அமைந்த சங்கத்தொகை நூல்களின் பாடற்ருெகையே அடிப்படையாக அமைந்திருத்தல் வேண்டும்.

திருச்சிற்றம்பலக் கோவையிலுள்ள நானுாறு திருப் பாடல்களுக்கும் அவற்றின் கருத்துரைப் பகுதிகளாக நானூறு கொளுக்கள் அமைந்துள்ளன. பாடல்களின் கருத் துரைப் பகுதிகளாகிய இக் கொளுக்களை அடியொற்றியே இப்பாடல்களுக்குத் துறைகள் வகுக்கப் பெற்றுள்ளன எனத்தெரிகிறது. 321, 366, 367-ஆம் பாடல்களுக்கு இரு வேறு துறைகள் அமையப் பொருள் வரையப் பெற்றிருத்த