பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை 297

தலைமகளது புணர்ச்சி நிகழ்வினை ஆராய்ந்தறிய விரும்பிய தோழி, வானத்தில் தோன்றும் பிறைமதியைக் காட்டித் தான் தொழுது நின்று, நீயும் இதனைத் தொழுவாயாக’ எனத் தலைவியை நோக்கிக் கூறுவதாக அமைந்தது.

மைவார் கருங்கண்ணி செங்கரம் கூப்பு மறந்து மற்றைப் பொய்வா னவரிற் புகாது தன் பொற்கழற் கேயடியேன் உய்வான் புகவொளிர் தில்லை நின் ருேன் சடை மேல

தொத்துச் செவ்வா னடைந்த பசுங்கதிர் வெள்ளைச் சிறுபிறைக்கே. (67) எனவரும் திருக்கோவையாகும். இது,

தொழுது காண் பிறை (178)

எனவரும் குறுந்தொகைத் தொடருக்கமைந்த விளக்கமாக உள்ளமை உய்த்துணரத்தக்கதாகும். செவ்வானடைந்த வெள்ளைச் சிறுபிறை, உலகெலாம் உய்யத் தில்லைமன்றுள் ஆடல் புரிந்தருளும் இறைவனது செஞ்சடையின் கண்ண தாகிய வெண்பிறையினைப் போன்று விளங்குவதாதலின் அது யாவராலும் தொழத்தகும் பெருஞ் சிறப்பினையுடைய தாயிற்று எனத் திருவாதவூரடிகள் தரும் விளக்கம், அந்தியிற் பிறை தொழுதலாகிய இவ் வழிபாட்டிற்கும் சிவ வழிபாட்டிற்கும் உள்ள தொடர்பினைப் புலப்படுத்தும் முறை யில் அமைந்ததாகும்.

தலைமகளை அடையப்பெருது ஆற்ரு நிலையினகிைய தலைமகன், மடலூர்ந்தாயினும் தலைமகளை யடையவெண்ணிய தனது ஆற்ருமை தோன்ற, மடலூர் தலை உலகின்மேல் வைத்துக் கூறுவதாக அமைந்தது,

காய்சின வேலன்ன மின்னியல் கண்ணின் வலைகலந்து வீசின போதுள்ள மீனிழந்தார் வியன் தென் புலியூர் ஈசன சாந்தும் எருக்கும் அணிந்தோர் கிழிபிடித்துப் பாய்சின மாவென ஏறுவர் சீறுTர்ப் பனைமடலே.

(திருக்கோவை - 74)

எனவரும் திருப்பாடலாகும். இது, மாவென மடலும் ஊர்ப பூவெனக் குவிமுகிழ் எருக்கங் கண்ணியுஞ் சூடுப மறுகின் ஆர்க்கவும் படுப பிறிதும் ஆகுப காமங்காழ்க் கொளினே (17)