பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரமும் திருக்கோவையும் 325

பெருங்கடல் மூடிப் பிரளயங்கொண்டு பிரமனும்போய் இருங்கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும் கருங்கடல் வண்ணன் களேபரமுங் கொண்டு கங்காளராய் வருங்கடல் மீள நின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே

(4–112–7) எனவரும் திருவிருத்தத்துடன் ஒப்புநோக்கி யுணர்தற் குரியதாகும்.

நெஞ்சிற் கள்ளத்தையுடைய வஞ்சகர்க்கு இரங்கி அருளாதவகையில் அவர்களால் உணர்தற்கு அரியவனுக இறைவன் மறைந்துள்ள தன்மையினை, கள்ளப் படிறர்க்கு அருளா அரன் (திருக்கோவை - 87) என வரும் தொடரில் வாதவூரடிகள் குறித்துள்ளார். இத் தொடர்,

உள்ள முள்கலந் துள்.கவல் லார்க்கலால்

கள்ளமுள்ள வழிக் கசிவானலன் (5-82-4)

எனவும்,

" கரவாடும் வன்னெஞ்சர்க் கரியான (4-7-1) எனவும்,

" வஞ்சனையார் ஆர்பாடும் சாராத மைந்தனை (4-19-8) எனவும் வரும் தேவாரத் தொடர்களின் பொருளை அடி யொற்றி யமைந்திருத்தல் அறியத்தக்கதாகும்.

தில்லையம்பலவன் யாழோசை போலும் மொழியை யுடைய உமையை ஒரு பாகத்திற் கொண்டவன் என்றும் அலைகளையுடைய கடல்கள் ஏழும் உலகங்கள் ஏழுமாய் எங்கும் நீக்கமற விளங்குபவன் என்றும் இறைவனைப் போற்றுவதாக அமைந்தது,

யாழார் மொழிமங்கை பங்கத் திறைவன் எறிதிரைநீர் ஏழாய் எழுபொழிலா யிருந்தோன் (93) எனவரும் திருக்கோவையாராகும். இது,

யாழைப் பழித்தன்ன மொழிபங்கன் (7-71-1) எனவும,

சூழொளி நீர்நிலந்தித் தாழ்வளி யாகாசம் வானுயர் வெங்கதிரோன் வண்டமிழ் வல்லவர்கள் ஏழிசையை யேழ்நரம்பின் ஓசையை (7-81-6) எனவும் வரும் சுந்தரர் தேவாரத் தொடர்களுடன் ஒப்பு நோக்குதற்குரியதாகும்.