பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326

பன்னிரு திருமுறை வரலாறு


தில்லைச் சிற்றம்பலவனை அம்பலத்தாடும் எம்சோதி (94) எனச் சோதியாய்த் தோன்றும் உருவமாக அடிகள் போற்றியுள்ளார். சோதிப் பொருளாகிய அவ்விறைவன் அன்பிற் சிறந்த அடியாருள்ளத்திலும் அம்பலத்திலும் ஒளியுருவினகைத் திகழுந் திறத்தினை,

உருகுதலைச் சென்ற உள்ளத்தும் அம்பலத்தும் ஒளியே

பெருகுதலைச் சென்று நின்ருேன் (திருக்கோவை-104)

என அடிகள் உளங்கசிந்து போற்றியுள்ளார். இத்தொடர்,

சுடர் விட்டுளன் எங்கள் சோதி எனவரும் திருப்பாசுரத் தொடர்ப் பொருளோடு ஒப்பு நோக்கி யுணரத்தக்கதாகும்.

இயல்பாகவே பாசங்களின் நீங்கினமையால் முத்த ஞகவும் தன்னை அன்பினல் வணங்கும் அடியார்களின் பாசத்தளையறுத்து வீடு பேறளித்தலால் முத்தி வழங்கும் பிரானுகவும் திகழ்வோன் தில்லையம்பலவன் என்னும் உண்மையினை ,

முத்தன் முத்தி வழங்கும்பிரான் (திருக்கோவை - 127) எனவரும் தொடரால் வாதவூரடிகள் குறித்துள்ளார். இத்தொடர், -

முத்தா முத்தி தரவல்ல முகிழ்மென் முலையாள் உமைபங்கா "

(7–52–1)

எனவரும் சுந்தரர் தேவாரத்தை ஒத்தமைந் திருத்தல் காணலாம்.

நட்புச் செய்தால் பேயோடாயினும் பிரிதல் அரிது என்னும் வாய்மொழியினை,

பிரிவு செய்தாலரிதே கொள்க பேயொடும் என்னும் பெற்றி

(திருக்கோவை -144)

எனவரும் தொடரில் அடிகள் எடுத்தாண்டுள்ளார். இப் பழமொழி,

பேயோடேனும் பிரிதல் இன்னுது :7-95-9, என வரும் சுந்தரர் தேவாரத்திலும்,

இன்னுதே, பேனயோ டேனும் பிரிவு (122)

என்னும் பழமொழியிலும் இடம் பெற்றிருத்தல் அறியத் தக்கதாகும். -