பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாந் திருமுறை

உள்ளான். இத்திருவுருவமே கருவூர்த்தேவர்க்கமைந்த திருவுருவங்களுள் மிகப்பழையதெனத் தெரிகிறது. தஞ்சை இராசராசேச் சரத்திருக்கோயிலின் மேலைத்திருச்சுற்றிலும் இவரது திருவுருவம் அமைக்கப்பெற்று அன்பர்களால் வழிபாடு செய்யப்பெறுகின்றது.

இதுகாறுங் கூறியவற்ருல் சாதிகுலம் முதலிய தளைகளைக்களைந்து துறவுமேற்கொண்டு கையில் ஒடேந்திப் பிச்சையேற்றுண்டு இறைவனை இனிய தமிழாற்பாடிப் போற்றுதலையே தமக்குரிய சிறந்த குறிக்கோளாகக் கொண்டு, இராசராசசோழன், கங்கைகொண்ட சோழன் என்னும் முடிவேந்தர்களால் நன்கு மதித்து வழிபடப் பெற்ற அருளாசிரியராகித் திருநெறிய தமிழ் வளர்த்த தவப்பெருஞ்செல்வர் கருவூர்த்தேவரெனக் கண்டோம். இவரைக் குறித்துப் பொருந்தாத கதைகள் சில பிற்காலத் தவராற் புனையப்பட்டன. இவராற்பாடப்பெற்ற திரு விசைப்பாப் பாடல்களை நன்கு பயின்ற அறிஞர்கள் பிற்காலப் பொய்க்கதைகளை ஒரு சிறிதும் நம்பமாட்டார்க ளென்பது திண்ணம்.

ச. பூந்துருத்தி நம்பிகாடநம்பி

இவர், திருவையாற்றுக்கு அண்மையிலுள்ள திருப்பூந் துருத்தியிற் பிறந்தவர். காடன் என்னும் இயற்பெயர் உடையவர். இச்செய்தி பூந்துருத்திக்காடன் என இவர் தம்மைக் குறிப்பிடுதலாற் புலனும். ஆடவரிற் சிறந்தோன் என்னும் பொருளைத் தரும் நம்பி என்ற சொல், இவரது இயற்பெயரின் முன்னும்பின்னும் இணைத்து வழங்கப்பெறுதலால், இவர்பாலமைந்த பெருஞ்சிறப்பு இனிது புலனுகும். இவர் பாடிய திருவிசைப்பாப் பதிகங்கள் இரண்டும் முறையே திருவாரூரையும் தில்லைச் சிற்றம்பலத்தையும் போற்றுவனவாக அமைந்துள்ளன. அவற்றுள் திருவாரூர்த் திருவிசைப்பாவில் இரண்டு திருப் பாடல்களே காணப்படுகின்றன. திருவாரூர் ஆதியாய் விளங்கும் வீதிவிடங்கப்பெருமான் பவனி போந்து நடங்குலாவிய சிறப்பினை இப்பாடல்கள் விசித்து

உரைக்கின்றன.

25