பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாந் திருமுறை 鹦舒

எ. திருவாலியமுதனுர்

திருவாலி நாடென்பது, சோழநாட்டிற் காவிரிக்கு வட கரையிலுள்ள உள்நாடுகளுள் ஒன்று. இந்நாட்டின் தலைநகர் திருவாலியென்பதாகும். இது சீகாழிக்கு 3 கல் தொலைவில் உள்ளது. திருவாலி யென்னும் இவ்வூரிற் பிறந்து அமுதனர் என்னும் பெயர் பெற்றமையால் இவர் திருவாலியமுதனுர் என வழங்கப்பெற்றனர். இவர் அந்தணர் மரபினர். நான்கு வேதங்களையும் நன்கு பயின்றவர். சோழநாட்டிலுள்ள வளமார்ந்த ஊராகிய மயிலாடு துறையில் வாழ்ந்தவர். இச் செய்தி, " வரைசெய் மாமதில் மயிலையர் மன்னவன் மறைவல திருவாலி" என்றும், "து நான்மறையான் அமுதவாலி " என்றும், " அறைசெந்நெல்வான் கரும்பின் அணியாலைகள் சூழ் மயிலை, மறைவலவாலி " என்றும் இவர் தம்மைப்பற்றிக் கூறுந் தொடர்களால் இனிது புலனுகும். மயிலை யென்பது மயிலாடுதுறை யென்பதன் மரு.உ. இவர் வைணவராகத் தோன்றிப் பின்பு சிவபக்தியுடையவராகத் திகழ்ந்தாரென்ற செய்தி செவிவாயிலாகக் கேட்கப்படுவ தென்பர் சிலர். இதனைப் புலப்படுத்தற்குரிய எத்தகைய குறிப்பும் இவர் பாடல்களில் இல்லாமையால் இதனை ஒருதலையாகத் துணிதற்கில்லை.

திருவாலியமுதனர் பாடியனவாக ஒன்பதாந் திரு முறையில் நான்கு பதிகங்கள் உள்ளன. இவை யாவும் கோயிலென வழங்கும் தில்லையம்பலத்தைப் போற்றிப் பாடப்பெற்றனவாகும். இவற்றுள் மையன்மாதொரு கூறன்’ என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகம், தில்லைச் சிற்றம்பலப் பெருமானுடைய திருவடிமுதல் பிறைமுடி யீருக அமைந்த திருக்கோல முழுவதும் என் சிந்தையுள் இடம் பெற்று நிலைத்தது எனப் பாதாதி கேசமாக இவ்வா சிரியராற் பாடப் பெற்றுள்ளது.

பவளமால்வரை என்ற முதற் குறிப்புடைய பதிகம், தில்லையம்பலக் கூத்தனைக் காதலித்த இளமகளொருத்தி யின் கூற்ருக அமைந்துளது. இறைவனை நினைந்துருகும் தலைவி,

1. மயிலாடுதுறை இக்காலத்தில் மாயூரம் என வழங்குகின்றது.