பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488

பன்னிரு திருமுறை வரலாறு


எழுப்பி, அதன் கண் விந்துத்தானத்து அமிழ்தமாகிய நெய்யைச் சுழுமுனை நாடி இடைநாடியாகிய சுருக்கு சுரு வங்களால் சொரிந்து ஓமஞ் செய்து, விந்துத் தானமாகிய புருவ நடுவிலே சிகர யகர வகரங்கள் மூன்றும் முறையே அதுவெனும் (தற்பரப் பொருளும் நீயெனும் துவம்பதப்) பொருளும் ஆகின் ருய் எனும் அசியதப்) பொருளும் ஆம் முறைநோக்கி அதனுல் சிவோகம் பாவனை செய்வளுயின், அப் பாவனைக்கண் அம்முதல்வன் விளங்கித் தோன்றுவன். அப் பாவகன் ஆண்டான் அடிமைத்திறத்தால் அடிமை யாவன். இவ்வுண்மையினை அறிவுறுத்துவது,

அஞ்செழுத்தா லுள்ளம் அரனுடைமை கண்டரனே அஞ்செழுத்தால் அர்ச்சித் திதயத்தில் - அஞ்செழுத்தால் குண்டலியிற் செய்தோமம் கோதண்டம் சானிக்கில் அண்டளும் சேடனும் அங்கு. (சிவஞானபோதம்-வெண்பா)

என்னும் செய்யுளாகும், இறைவனைத் திருவைந்தெழுத் தின் துணையால் புருவத்தின் இடைவெளியாகிய விந்துத் தானத்திற் கண்டு வழிபடும் இம்முறை,

நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம் பற்றுக்குப் பற்ருய்ப் பரம னிருந்திடஞ் சிற்றம்பலமென்று சேர்ந்துகொண் டேனே. (2770)

எனவரும் திருமந்திரத் திருப்பாடலில் விளக்கப் பெற்றிருத் தல் அறியத் தக்கதாகும்.

நெல்லுக்குத் தவிடும் உமியும் அநாதியாயிருந்தும் ஒருகாலத்திலே நீங்குந் தன்மைபோல, உயிர்களுக்கு மல மாயை கன்மங்கள் தொன்மையேயுள்ளன என்றும், அவை தத்தம் காரியத்தைச் செய்தல் முதல்வன் ஆணையால் என்றும், வீடுபெற்ற உயிர்களிடத்தில் அவை இல்லையா யிருப்பினும் பாசப் பிணிப்புடைய உயிர்களிடத்தே நீங்காது நிற்றலால் அவற்றின் உண்மைத் தன்மை அழியாதென்றும் அறிவுறுத்துவது,

நெல்லிற் குமியும் நிகழ்செம் பினிற்களிம்பும் சொல்லிற் புதிதன்று தொன்மையே - வல்லி மலகன்மம் அன்றுளவாம் வள்ளலாற் பெசன் வான் அலர் சோகஞ் செய்கமலத் தாம் :

(சிவஞானபோதம் - வெண்பா - 12)