பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502

பன்னிரு திருமுறை வரலாறு


தத்துவங்களும் தத்த வகர்த்தாக்களும் நீங்கியே முத்தி என்பதற்கு இத்திருமந்திரத்தினை மேற்கோளாகக் காட்டு வர் மதுரைச் சிவப்பிரகாசர்.

பொன்னம்பலத்தில் ஐந்தொழிற் றிருக்கூத்தியற்றி யருளும் இறைவன். தன் திருவடியிலே நகரமும், திருவுந்தி யிலே மகரமும், திருத்தோளிலே சிகரமும், திருமுகத்திலே வகரமும், திருமுடியிலே யகரமும், திருவாசி ஓங்காரமும், அதன்கண் உள்ள சுடர்கள் ஓங்காரத்தை விட்டு நீங்காத பஞ்சாக்கரமும் ஆக அமைய இவ்வாறு திருவைந்தெழுத் தினையே தனக்குத் திருமேனியாகக் கொண்டு ஆடல் புரிந்தருளுந்திறத்தினை அறிவுறுத்துவன, ஆடும்படி கேள் நல் லம்பலத்தான் ஐயனே நாடுந் திருவடியி லே நகரம் - கூடும் மகரம் உதரம், வளர்ந்தோள் சிகரம், பகரு முகம்வா, முடி யப்பார். (உண்மை-32) எனவும்,

ஓங்கார மேநற் றிருவாசி, உற்றதனில் நீங்கா எழுத்தே நிறைசுடராம் - ஆங்காரம் அற்ருர் அறிவர் அணி அம்பலத்தான் ஆடலிது பெற்ருர் பிறப்பற்ருர் பின். (உண்மை-34) எனவும்வரும் உண்மை விளக்கச் செய்யுட்களாகும். அம்பலக்கூத்தளுகிய இறைவன், ஒலிக்கின்ற உடுக்கை ஏந்திய திருக்கரத்திலே சிகாரமாகவும், வீசிய திருக் கரத்திலே வகாரமாகவும், அஞ்சலென்று அமைத்த திருக் கையிலே யகாரமாகவும், அக்கினியேந்திய திருக்கரத்திலே நகாரமாகவும், முயலகனை மிதித்து ஊன்றிய திருவடியிலே மகாரமாகவும், கொண்டருளி ஆடல்புரிந்தருளுவதனையும், உடுக்கையேந்திய கையினலே மாயையை நீக்கி, தீ யேந்திய திருக்கரத்தினலே வல்வினையைச் சுட்டெரித்து, ஊன்றிய திருவடியினலே மலம் சாய அமுக்கி அருளே தநுவாக நிறுத்தி, அமைத்த திருக்கரத்தினலே ஆன் மாக்களை ஆனந்த வெள்ளத்தில் அழுத்துதல் இறைவனது திருக்கூத்து முறைமை என்பதனையும் விரித்துரைப்பன,

சேர்க்குந் துடிசிகரம், சிக்கனவா வீசுகரம், ஆர்க்கும் யகரம் அபயகரம் - பார்க்கிலிறைக்(கு) அங்கி நகரம், அடிக்கீழ் முயல்களுர் தங்கும் மகாமது தான். 'உண்மை விளக்கம்-33)