பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

512

பன்னிரு திருமுறை வரலாறு


அமைந்த செய்யுட்களை ஓலைத்துக்கு என முன்னேர் வழங்கியுள்ளார்கள். இக்காலத்தார் சீட்டுக்கவியென வழங்குவர்.

கழறிற்றறிவாராகிய சேரமான் பெருமாள் நாயனுர் கொடுங்கோளுராகிய வஞ்சியைத் தலைநகராகக் கொண்டு சேரநாட்டை ஆட்சி புரியும் காலத்திற் பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையம்பதியிற் பாணபத்திரனென்னும் பெயருடைய இசைப்பானரொருவர் வாழ்ந்திருந்தார். அவர் பாண்டிய மன்னஞல் நன்கு மதிக்கப்பெற்றவர். திருவாலவாயிறைவற்கே இசைத்தொண்டு புரியுங் கடமை பூண்டவர். அரசர் முதலியோரை யணுகாது பரமனையே பாடுவாராகிய அப்பாணர்க்கு வறுமைநிலை யுண்டாகியது. பாடுவார் பசிதீர்ப்பாராகிய திருவாலவாயிறைவர், பாண பத்திரரது வறுமையை நீக்கத் திருவுளங் கொண்டார். வேண்டுவார் வேண்டுவதே யீந்தருள் புரியுந் தாமே எல்லாங் கொடுக்க வல்லராயினும் தம்பாற் பேரன்புடைய சேரமான் பெருமாளைக் கொண்டு பாணபத்திரரது வறுமை யைத் தீர்த்து உதவி புரிய வேண்டுமென்பது இறைவரது பெருவேட்கையாயிற்று. திருவாலவாயிறைவர் ஒரு நாள் இரவு பாணபத்திரரது க ன வி ேல தோன்றினர். * அன்பனே, என்பால் நிலைபெற்ற பேரன்புடையவன் சேரமான் பெருமாளென்னும் வேந்தன். அவன் உனக்குப் பொன் பட்டாடை, நவமணி பதிக்கப் பெற்ற அணிகலன் கள் முதலாக நீ வேண்டியவெல்லாங் குறைவறக் கொடுப் பான். அதன் பொருட்டு அவனுக்கு ஒரு திருமுகம் எழுதித் தருகின்ருேம். நீ அதனைக் கொண்டு விரைந்து மலைநாடு சென்று பொருள் பெற்று வருக ' என்று கூறி,

மதிமலி புரிசை மாடக் கூடற் பதிமிசை நிலவு பாணிற வரிச்சிற கன்னம் பயில்பொழில் ஆல வாயில் மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம் பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க் குரிமையின் உரிமையின் உதவி யொளி திகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் செருமாவுகைக்குஞ் சேரலன் காண்க

1. * மன்னுடைமன்றத்து ஒலைத்துக்கினும் s

(நன்னூல், பாயிரம் 52-ம் சூந்திரம்)