பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/649

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாயகுர் ఢిస్ట్రీ

பாடிய பாடல்களும், இறைவனைக் காதலித்த தலைவியின் ஆற்ருமையினையும் பேரன்பின் திறத்தினையும் புலப்படுத்தும் நிலையிற் பாடிய பாடல்களும் இதன் கண் அமைந்துள்ளன. தூய்மையுடைய சொற்களையே திரியாகவும் அவற்ரு லுணர்த்தக் கருதிய நற்பொருளையே நெய்யாகவும் தீய சொற் பயிலாத தூய்மையுடைய நல்ல நாவினையே அகலா கவுங் கொண்டு நக்கீர தேவர் வெண்பா அந்தாதியாகிய இச் சுடர்விளக்கினை மாதொரு பாகனகிய இறைவன் திரு முன்னே ஒளிபெருக ஏற்றி வழிபட்டார் என்பது,

சொல்லும் பொருளுமே தூத்திரியு நெய்யுமா நல்லிடிஞ்சில் என்னுடைய நாவாகச் - சொல்வரிய வெண்பா விளக்கா வியன் கயிலை மேலிருந்த பெண் பாகர்க் கேற்றினேன் பெற்று.

என வரும் அவரது வாய்மொழியால் இனிது விளங்கும்

காளத்தியிறைவனைக் கண்டு வணங்க வல்ல ஆற்ற லுடையதாயின் நாம் பெற்ற இம்மனிதப் பிறவி மிகவும் இனிமையுடையதே யென்பதனை,

இனிதே பிறவி இனமரங்க ளேறிக் கணிதேர் கடுவன்கள் தம்மின் - முனிவாய்ப் பிணங்கிவருந் தண் சாரற் காளத்தி பேணி வணங்கவல்ல ராயின் மகிழ்ந்து.

எனவரும் பாடலில் தக்கீரர் குறிப்பிட்டுள்ளார். காளத்தி மலையிற் கணிகளைப் பறிக்கச் செல்லும் குரங்குகள் தம்மிற் சினந்து பிணங்கி மாறுபடுதல் போன்று உலகியலின்பத் தைக் கருதி ஒருவரோடொருவர் பகைகொண்டு திரியும் நிலையினராகிய மக்கள், தம்முட் பகைமை நீங்கி எவ்வுயிர்க் கும் இன்பமளிக்கும் இறைவன் எழுந்தருளிய திருக் காளத்தியை வணங்க வல்லராயின் அவர் பெற்ற மனிதப் பிறவி மிகவும் இனிமையுடையதேயென்பது இத்திருப் பாட்டின் கருத்தாகும். இது மனித்தப் பிறவியும் வேண்டு வதே யிந்த மாநிலத்தே எனத் திருநாவுக்கரசர் கூறிய வாய்மொழிப் பொருளைத் தன் பாற் கொண்டிருத்தல் அறிந்து மகிழத்தக்கதாகும்.

அறிவு நூல்களைக் கற்ற பெரியோர்களால் ஏத்தி வழி படப்பெறும் காளத்தியிறைவனையடைந்து அடித்தொண்டு செய்யும் பேறுபெற்றேன். இவ்வுலகத்திற் பெறுதற்கரிய