பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/736

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

720

பன்னிரு திருமுறை வரலாறு


காணச் சென்ருர், சிவபெருமான் முருகவேள் நடுவாக உமையம்மையாருடன் எழுந்தருளிய திருக்கோலத்தைக் கண்டு மகிழ்ந்து அவ்வியப்புடைய செய்தியைத் தம் கன வர்க்கும் தெரிவித்தார். அவ்வருட்காட்சியைக் கண்ட திருவெண்காடர், அவ்வறையைத் திறந்து பார்த்தபொழுது மருதவாணர் மட்டும் தனித்திருத்தலைக் கண்டார். தாம் செய்த பிழையினைப் பொறுத்தருளும்படி மருதவாணரைப் பணிந்து வேண்டினர். மருதவாணர் மெய்ந் நூற் பொரு ளேத் திருவெண்காடர்க்கு உபதேசித்தார். எனினும் பெருஞ்செல்வராகிய திருவெண்காடர்க்கு உலகப் பற்ருெழி யவில்லை. அப்பற்றினை யொழித்தற்கு மருதவாணர் ஓர் உபாயஞ் செய்தார். காதற்றவூசியை இழை பிரிந்த நூலு டன் பட்டுத்துணியில் மடித்துப் பெட்டியில் வைத்து அப் பெட்டியை அவர் மனைவியார் கையிற் கொடுத்து நுமது கணவர்க்குரிய பொருள் இதுவாகும். இதனை அவரிடம் கொடுப்பீராக ' எனச் சொல்லி அவ்விடத்தை விட்டு அகன்று மறைந்தருளிஞர்.

திருவெண்காடர் தம் மனைவியார் தந்த பெட்டியைத் திறந்து பார்த்து அதனுள்ளே காதற்ற ஊசியும் நூற்சரடும் இருத்தல் கண்டு நெடிது நினைந்து இறைவனது திருக் குறிப்பை உணர்ந்து கொண்டார். நிலையில்லாத இவ்வுலக வாழ்வை நிலையுடையதென எண்ணி மகிழ்தல் தவறென வுணர்ந்தார். யான் எனது என்னும் இருவகைப் பற்றுக் களையும் அறவே நீத்துத் துறவறமாகிய தூய நெறியினை மேற்கொண்டார். தமது மாளிகையைத் துறந்து ஊரம்ப லத்தையடைந்தார். நீர் துறவடைந்து பெற்ற பயன் யாது’ என அரசன் வினவியபொழுது நீ நிற்கவும் யாம் இருக்கவும் பெற்ற தன்மையே அது ' என மறுமொழி பகர்ந்து மோன நிலையில் அமர்ந்திருந்தார்.

அடிகள் பலர் வீடுகளிலும் பிச்சையேற்றலைக் கண்டு வெறுப்புற்ற உறவினர் சிலர் அவரது தமக்கையாரைக் கொண்டு நஞ்சு கலந்த அப்பமொன்றை அடிகளுக்குக் கொடுக்கச் செய்தனர். அதனையுணர்ந்த அடிகள் தன் வினை தன்னைச்சுடும் ஒட்டப்பம் வீட்டைச் சுடும் ' என்று சொல்லி அதனை வீட்டின் இறப்பிற் செருகினர். வீடு தீப் பற்றியெரிந்தது. அடிகள் சில நாள் அங்கமர்ந்திருந்து தம் தாயார் இறந்தபொழுது சில பாடல்கள் பாடி அவருடல்