பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/741

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்காட்டடிகள் 725

தமது நிதியறையை எல்லாருங் கொள்ளை கொள்ளத் திறந்து விடும்படி கட்டளையிட்டார். தமது மாளிகையைத் துறந்து ஊரம்பலத்தை யடைந்து சிவயோக நிலையில் அமர்ந்திருந்தார்,

திருவெண்காட்ட்டிகள் வீடு தோறுஞ் சென்று பிச்சை யேற்றுண்டலைக் கண்டு வெறுப்புற்று அடிகளைக் கொல்லத் துணிந்த அவருடைய தமக்கையார், நஞ்சு கலந்த அப்ப மொன்றை யுண்ணும்படி சொல்ல, அதனை யுணர்ந்த அடிகள், அப்பத்தைப் பிட்டு ஒருபாதியைத் தமக்கையார் குடியிருக்கும் வீட்டிறப்பிற் செருகினர். அவ்வளவே வீடு தீக்கு இரையாயிற்று. சில நாட் கழித்து அடிகளது அன்னை யார் சிவபதமடைந்தார். அவருடலை அடக்கஞ் செய்யக் கருதிய சுற்றத்தார் அதனைச் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று வழக்கம் போல விறகுகளை யடுக்கி அவற்றின் மேல் வைத்தார்கள். அந்நிலையில் அங்குப் போந்த திருவெண்காட்டடிகள் விறகுகளை நீக்கி அவற்றுக்கு மாருக வாழைப் பட்டைகளை யடுக்கிச் சில பாடல்களைப் பாடி ஞானத்தீயால் தாயாருடல் வெந்து நீருகும்படி செய்து ஈமக்கடனை நிறைவேற்றினர். மருதப்பிரானை வணங்க விரும்பித் திருவிடை மருதூரடைந்து சில நாள் தங்கி யிருந்தார். பின்பு பல தலங்களை வணங்கிக் கோகரணம் பணிந்து உஞ்சேனை மாகாளத்தை யடைந்து இறைவனை வழிபட்டு அந்நகரின் புறத்தேயுள்ள சிறு காட்டில் விநாயகர் ஆலயத்தில் சிவயோக நிலையில் அமர்ந் திருந்தார். இரவில் பத்திரகிரி மன்னன் அரண்மனையிற் புகுந்து அணிகலங்கள் பலவற்றைத் திருடிவரும் கள்ளர் கள் தாம் வேண்டிக்கொண்டபடி விநாயகர் அருள் செய்தமை யெண்ணி அவ்வழியிலுள்ள விநாயகர் கோயிலை யடைந்து விலைமதிப்பரிய மணிமாலை யொன்றைப் பிள்ளை யார்க்குப் போட்டு விட்டுச் சென்ருர்கள். அப்போது இருட் போதாதலால் அவர்கள் சாத்திய மாலை கணபதி யருகே யோகநிலையி லமர்ந்திருக்கும் பட்டினத்தடிகள் கழுத்தில் விழுந்தது. யோக நிலையிலிருக்கும் அடிகள் அதனையறிந்திலர். சிறிது நேரத்திற்கெல்லாம் கள் வரைத் தொடர்ந்து பிடிக்க வந்த காவலர்கள் கணபதியாலயத் துள்ளிருக்கும் அடிகள் கழுத்தில் மணிமாலையைக் கண்டு இவனே கள்வனென்று சொல்லிப் பிடித்துச் சென்றனர்.