பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/802

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

786

பன்னிரு திருமுறை வரலாறு


சாந் திருமுறையிலுள்ள ஆளுடைய பிள்ளையார் திருக்கலம் பகமென்னும் இப்பிரபந்தமேயா கும். திருஞானசம்பந்தப் பிள்ளையாரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப் பெற்றமையின் இஃது ஆளுடைய பிள்ளையார் திருக்கலம் பகம் என்னும் பெயர்த்தாயிற்று. இதன் கண் ஒன்றுமுதல் நாற்பத்தொன் பதுவரையுன் ள பாடல்களே இப்பொழுது கிடைத்துள்ளன. நாற்பத்தொன்பதாம் பாடல் எழி லிணையடி யிசைமினே என முடிகின்றது. இவ்விறுதி அலையார்ந்த எனத் தொடங்கும் முதற் பாடலின் முதற் சொல்லோடு மண்டலித்து முடியவில்லை. அன்றியும் இப் பிரபந்தத்தின் முதற் பாடலாகிய ஒருபோகின் கண் தரவென்னும் உறுப்புக் காணப்படவில்லை. எனவே இக்கலம்பகத்தின் முதற் பாடலின் முதலுறுப்பாகிய தரவும் நாற்பத்தொன் பதாம் பாடலுக்குப் பின்னுள்ள ஏனைய பாடல்களும் ஏடுகளின் சிதைவினுல் மறைந்தன வெனக் கருதவேண்டியுளது. .ே த வ ர் க் கு நூறு செய்யுளும் முனிவர்க்குத் தொண்ணுாற்றைந்தும் அரசர்க்குத் தொண் ணுாறும் அமைச்சர்க்கு எழுபதும் வணிகர்க்கு ஐம்பதும் ஏனையோர்க்கு முப்பதும் என்ற வரையறையுடன் கலம்பக மாகிய இப்பிரபந்தம் இயற்றப்பெறுதல் வேண்டுமெனப் பிற்காலத்தில் வெண்பாப் பாட்டியலுடையார் வகுத்த சாதிபற்றிய பாட்டியல் மரபு அவர்க்குப் பன்னுருண்டுகள் முற்பட்டுத் தோன்றிய தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தும் நம்பியாண்டார் நம்பிகள் காலத்தும் நிலவிய தெனக் கொள்ளுதற்கில்லை.

சிவபெருமானருளால் சீகாழிப்பதியிற்ருேன்றி, உமை யம்மையார் அளவிறந்த ஞானத்தை அமிர் தாக்கிப் பொற் கிண்ணத் தளித்தருளப் பாலமுதாகிய அதனை நுகர்ந்து, தேவராலும் காணுதற்கரிய கடவுளைத் தோடுடைய செவியன் என்ற திருப்பதிகத்தால் எமக்கு அருள் புரிந்த பெருமான் பிரமாபுரமேவிய இவனே எனத் தம் தந்தை யார்க்கு அடையாளங்களுடன் சுட்டிக்காட்டிய திருஞான சம்பந்தப் பிள்ளையார், திருத்தலங்கள் தோறுஞ் சென்று அங்கங்கே வாழும் மக்கள் இறைவனது திருவருள் நெறியைக் கடைப்பிடித்து இடர் நீங்கி யின்புறுதல் வேண்டி நிலையான திருப்பதிகங்களை யருளிச்செய்து உலகத்தார்க்கு இறைவன் திருவடிகளிற் பத்திமையை