பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/902

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

888 பன்னிரு திருமுறை வரலாறு

மேல் ஆணையிட்டுக் கூறினர். அதனைக்கேட்ட நாயன தம்மனைவியாரை அயலவர்போல நோக்கி, எம்மை எனப் பன்மைச் சொல்லாற் கூறினமையால், மற்றை மாதர் களையும் என்மனத்தாலும் தீண்டேன்’ என உறுதி கூறினர். கற்பிற்சிறந்த அவர்தம் மனைவியார் தம் கணவஞ்ச்க்கு இயைந்த பணிகளையெல்லாம் நாள் தோறும் விருப்புடன் செய்துவர, திருநீலகண்டத்தின் பால் அன்புடைய அவ்விருவரும் உடனுறைவின்றி, அற்புறு புணர்ச்சியின்மை அயலறியாது வாழ்ந்து வந்தனர். இளமையில் மிக்குள்ளாராகிய இவ்விருவரும் திருநீல கண்டம் என்னும் ஆன மொழியினை வழுவாது போற்றி ஆண்டுகள் பலவும் செல்லத் தமது இளமை நீங்க முதுமை நிலையெய்தி உடல் தளர்ச்சியுற்ற பின்னரும் இறைவன் பால் வைத்த அன்பின் திறத்தில் தளராதவர்களாய் ஒழுகினர்.

இவ்வாறு ஒழுகிவரும் நாளில், நிறையினும் கற்பினும் வழுவாத இவர்தம் இல்வாழ்க்கைச் சிறப்பினை உலகத்தார் அறிந்து உய்யும் வண்ணம் புலப்படுத்தத் திருவுளங் கொண்ட சிவபெருமான், சிவயோகியார் வேடங்கொண்டு திருநீலகண்டர் மனையை அடைந்து, தம்பாலுள்ள திருவோடு ஒன்றினை அவரிடம் தந்து நம்பி! நீ இதனை உன்பாற்பாதுகாத்து வைத்திருந்து நாம் வேண்டும்போது தருக என்று சொல்லிச் சென்ருர், சென்ற சிவயோகியார் பல நாட்கள் கழிந்தபின்பு தாம் கொடுத்திருந்த திரு வோட்டினை வைத்த இடத்தில் இல்லாமல் மறையச்செய்து, திருநீலகண்டரை அணுகி, யான் முன்பு உன்னிடம் தந்த ஒட்டினைத்தருக எனக்கேட்டார். தாம் பாதுகாத்து வைத் திருந்த இடத்திற்சென்று ஒட்டினைக் காணப்பெருது அதனைப் பலவிடங்களிலும் தேடித்திகைப்புற்ற திருநீல கண்டநாயனர், சிவயோகியாரை வணங்கி, கம்பெருமானே! நீர் தந்த திருவோட்டினை யான் பாதுகாத்து வைத்திருத்த இடத்திலும் வேறிடங்களிலும் பலமுறை தேடியும் காணப் பெற்றிலேன். அதனினும் சிறப்புடைய நல்ல பாத்திரம் தருகின்றேன். அதனை ஏற்றுக்கொண்டு எனது பிழை யினைப்பொறுத்தருள வேண்டும் என இரந்து வேண்டிஞர். அதுகேட்ட சிவயோகியார், யான் தந்த மண்ணுேட்டினை யன்றி நீ பொன் னிற்ைசெய்து தந்தாயாயினும் அதனை