பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/903

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 889

ஏற்றுக்கொள்ளமாட்டேன். முன்பு நான்தந்த ஒட்டினையே கொண்டுவா’ என் ருர். அதுகேட்ட திருநீலகண்டர், கேடிலாப் பெரியோய்! நீ என் பால் வைத்த ஒடுகெட்டதனுல் அதனைத் தேடியும் காணுத நிலையில் அதனினும் நல்லதாய் நீண்ட நாளைக்குப் பயன் படும் திருவோட்டினைத் தருகின் றேன் என்று யான் கூறவும் இவ்வாறு பிணங்கிக் கூறியது என் உணர்வையெல்லாம் ஒழித்தது' எனவருந்திக்கூறினர். புண்ணியப்பொருளாய் வந்த இறைவர், நாயனரை நோக்கி, 'யான் உன்பால் வைத்த அடைக்கலப் பொருளைக் கவர்ந்து கொண்டு பாவத்திற்குச் சிறிதும் அஞ்சாது பலவகைப் பொய்ம்மொழிகளைப் பகர்கின்ருய், யாவரும் காண உன்னைத் தப்பவொட்டாமல் மறித்து எனது திருவோட்டினை வாங்கிக்கொண் டல்லது இவ்விடத்தைவிட்டுப் போக மாட்டேன் என்ருர். வளத்தினுல் மிக்க திருவோட்டினை யான் கவர்ந்தேனல்லேன்; என் உள்ளத்திலும் களவில்லா மையை எவ்வாறு தெரிவிப்பேன் என்ருர் நாயஞர். 'உன் காதல் மைந்தனைப்பற்றிக் குளத்தினில் மூழ்கிச் சத்தியஞ்செய்’ என்ருர் சிவயோகியார். அப்படிச் செய்தற்கு எனக்குப் புதல்வன் இல்லையே என்ருர் வேட்கோவர். மைந்தனில்லையாயின் மனைவியின் கையைப்பிடித்துக் குளத்தில் மூழ்கிச் சத்தியஞ்செய்’ என்ருர் சிவயோகியார். 'நானும் என் மனைவியும் எங்களிடையே புள்ளதொரு சபதத்தால் உடன் மூழ்க இசைவில்லை. யானே புனலில் மூழ்கி உறுதி செய்கிறேன். என்னுடன் வாரும் என்ருர் நாயனுர் நான் முன்னே உன்பால் தந்துசென்ற திருவோட்டினைத்தாமலும், அதனை நீ கவர்ந்துகொள்ள வில்லையென்ருல் உன்மனேவியின் கைப்பிடித்துச் சத்தியஞ் செய்யாமலும் சித்தை வலித்திருக்கின்ருய், தில்லை வாழந் தணர்கள் வந்து கூடியிருக்கும் பேரவையிலே இவ் வழக்கினைச் சொல்வேன் ' என்று சிவயோகியார் சொல்லத் திருநீலகண்டரும் அதற்கிசைந்து அவருடன் சென்ருர்.

தில்லை வாழந்தணர்களின் அவையினையடைந்த சிவ யோகியார், “ இந்த வேட்கே வன்பால் யான்வைத்த பாத்திரத்தைத் தந்தொழியான்; கெடுத்தானேல் தன் மனைவி கைப்பற்றி வந்து மூழ்கியும் தாரான்; வலிசெய் கின்றன் ” என்று தம் வழக்கினைக் கூறினர். அதுகேட்ட அந்தணர்கள், திருநீலகண்டரை நோக்கி, நிறையுடைய