பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/913

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 899

தருளிய ஆகம நூல் எங்கும் இல்லாதது ஒன்றைக் கொண்டு வந்தேன் என்ருன் முத்தநாதன். அது கேட்ட வேந்தர், மாறில் ஆகமத்தை வாசித்து அருள்செய வேண்டும் ' என வேண்டினர். நின்பட்டத்தரசி இல்லா மல் நீயும் நானும் வேறிடத்து இருத்தல் வேண்டும்’ என்ருன் முத்தநாதன். அது கேட்ட வேந்தர், மனைவி யாரை அந்தப்புசத்திற்குச் செல்லப் பணித்து, வந்த அடி யாரை ஆசனத்து அமர்த்தித் தாம் கீழிருந்து ஆகமப் பொருளை அருள் செய்யவேண்டும் என வேண்டிக் கொண்டார். அடியார் வேடத்தில் வந்த முத்தநாதன், தன் மடிமீது வைத்துப் புத்தகக் கட்டை அவிழ்ப்பவன் போல் உள்ளிருந்த வாளினை எடுத்துத் தான் நினைந்த தீச்செயலை நிறைவேற்றினன். வாளினுற் குத்தப்பட்ட வேந்தர் சிவ வேடமே மெய்ப்பொருள் ' என்று அவனை வணங்கி வென் ருர். பொய் வேடத்தவனுகிய முத்தநாதன் உள்ளே புகுந்த பொழுதே அங்கு என்ன நிகழ்கின்றதோ எனத் தன் மனத்தைச் செலுத்திய தத்தன் என்னும் வாயில் காவலன், அந்நிலையில் விரைந்து உள்ளே புகுந்து தன் கை வாளிளுல் பகைவனை வெட்டச் சென்ருன். அது கண்ட வேந்தர் தத்தா ! இவர் நம்மவர் ' எனத் தடுத்து வீழ்ந்தார். அங்ஙனம் வீழ்கின்ற வேந்தரைத் தலையினுல் வணங்கித் தாங்கிய தத்தன், யாது நான் செய்கேன்? ' என்ருன். அது கேட்ட வேந்தர் எம்பிரான் அடியாராகிய இவர் இவ்விடத்தினை விட்டுச் செல்லுதற்குத் தடை நிகழா வண்ணம் இவரைக் கொண்டு போய் விடுவாயாக எனப் பணித்தார். அவ்வாறே தத்தன், முத்தநாதனை அழைத்துக் கொண்டு செல்லும்பொழுது, இந்நிகழ்ச்சியைக் கேள்வி யுற்ற மக்கள் பலரும் அரசனுக்குத் தீங்கு செய்த இக்கொடி யோனைக் கொன்ருெழிப்போம் எனச் சூழ்ந்து கொண் டார்கள். தத்தன், இத் தவவேடத்தான் இவ்விடத்தை விட்டுத் தீங்கின்றிச் செல்வது நம் வேந்தரது ஆணை யாகும் என்று கூறி அவர்களைத் தடுத்து நிறுத்தி வஞ் சனே வேடத்தானுகிய அவனை ஆட்கள் நடமாட்டமில்லாத காட்டு வழியிலே விட்டு விட்டு, அவனுக்குத் தீங்கின்மை யறிய உயிர் தாங்கியிருக்கும் மெய்ப்பொருள் வேந்தரை விரைந்து அணுகி, தவ வேடங்கொண்டு வென்றவற்கு இடையூறின்றி விட்டு வந்தேன் என்ருன். அது கேட்ட