பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/957

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 944.

வேண்டும். குளித்தற்குத் தண்ணிர் கொண்டுவா’ என்று சொல்ல மனைவியாரும் விரைந்து சென்ருர். அதற் கிடையில் நமிநந்தியடிகளுக்குச் சிறிது உறக்கம் வந்தது. அப்பொழுது வீதிவிடங்கப்பெருமான் கனவில் தோன்றி, * அன்பனே, திருவாரூரிலே பிறந்தார் எல்லோரும் நம்முடைய கணங்கள். அதை நீகாண்பாய் ' என்று சொல்லி மறைந்தருளினர். உறக்கம் நீங்கி விழித்தெழுந்த நமிநந்தியடிகள், தாம் அடியார்களிடையே சாதிவேறுபாடு நினைந்தது தவறென்றுணர்ந்து எழுந்தபடியே வீட்டி னுள்ளே சென்று சிவபூசையை முடித்து மனைவியார்க்கு நிகழ்ந்ததைச் சொல்லினர். பொழுது விடிந்தபின் திருவாரூர்க்குச் சென்ருர், அப்பொழுது திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லாரும் சிவசாரூபம் பெற்றவர்களாகத் தோன்றக்கண்டனர். அடியேன் செய்த பிழையினைப் பொறுத்தருள வேண்டும் என்று ஆரூர்ப்பெருமானை இறைஞ்சிப் போற்றினர். நமிநந்தியடிகள் பின்பு திருவாரூரிலேயே குடிபுகுந்து தம்முடைய திருத்தொண்டு களைச் செய்துகொண்டிருந்தார். இவ்வாறு சிவனடியார் களுக்கு வேண்டுவன எல்லாம் நியதியாக நெடுங்காலம் செய்திருந்து திருநாவுக்கரசரால் தொண்டர்க்கு ஆணி’ எனச் சிறப்பிக்கப்பெறும் பேறு பெற்றுத் திருவாரூர்ப் பெருமான் திருவடி நீழலையடைந்தார்.

திருவாரூர்ப்பெருமானை வழிபட்ட திருநாவுக்கரசர் அத்திருக்கோயிலில் நீரால் திருவிளக்கிட்டுப் பங்குனி யுத்திரப்பெருவிழாவைச் சிறப்புறச் செய்த நமிநந்தியடிக ளாரது திருத்தொண்டு நாடறிந்த தென்பதனை யறிவுறுத்தி அத்திருத்தொண்டுகளைச் செய்த திண்மை மெய்த்தவராகிய நமிநந்தியடிகள் தொண்டர்க்கெல்லாம் ஆணிப்பொன் ஆவார் எனச் சிறப்பித்துப்போற்றும் நிலையில்,

ஆராய்ந் தடித்தொண்ட ராணிப்பொன் ஆரூரகத்தடக்கிப் பாரூர் பரிப்பத்தம் பங்குனியுத்திரம் பாற்படுத்தான் நாரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பிதந்தி நீராற் றிருவிளக் கிட்டமை நீணு டறியு மன்றே (4-192-2) எனவரும் திருவிருத்தத்தை அருளிச் செய்துள்ளார்.

நமிநந்தியடிகள் திருவாரூரிற் சிவனடியார்கள் செய்யும் திருப்பணிக்கெல்லாம் உறுதுணையாயுள்ள செய்தியை,