பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/958

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

942

பன்னிரு திருமுறை வரலாறு


துடிக்கின்ற பாம்பரையார்த்துத் துளங்கா மதியணிந்து முடித்தொண்ட சாகி முனிவர் பணிசெய்வ தேயு:கன் றிப் பொடிக்கொண்டு பூசிப் புகுந்தொண்டர் பாதம் பொறுத்த

பொற்பால் அடித்தொண்டன் நந்தியென் பானுளன் ஆரு சமுதினுக்கே"

{{-i62-4}

எனவரும் திருவிருத்தத்தில் திருநாவுக்கரசர் குறித்

துள்ளமை காணலாம்.

நமிநந்தியடிகள் திருவாரூரில் தங்கிய காலத்தில் சமணத்துறவிகளிற்பலர் கொடி, விதானம், பறை, சங்கம், கைவிளக்கு ஆகிய குறைவில்லாத பெருஞ்செல்வத்தைப் பெற்றுத் திருவாரூர்க்குள்ளே வாழ்ந்தனராயினும் நமி நந்தியடிகள் புறப்பட்டுவந்தால் அவ்வமணர்களது செல்வப் பொலிவனைத்தும் திருநீறிட்ட சிவனடியார்களுக்கு முன்னே அகத்திருளும் புறத்திருளும் கெடுமாறுபோன்று விரைந்து கெடும்நிலையில் அவ்வமணர்கள் ஓடிமறைந்தனர். இச்செய்தியினை,

கொடிகொள் விதானங் கவரி பறைசங்கம் கைவிளக்கோ டிடிவில் பெருஞ்செல்வ மெய்துவ செய்தியு மூனமில்லா அடிகளும் ஆரூர் அகத்தின ராயினும் அத்தவளப் பொடிகொண் டணிவார்க் கிருளொக்கும் கத்தியுதப்படிலே "

(4-103-6) எனவரும் திருப்பாடலில் திருநாவுக்கரசர் குறித்துள்ளமை யால் அடிகள் காலத்தை யொட்டித் திருதாவுக்கரசர் திருவாரூரை வழிபட்டார் என்பதனை ஒருவாறு உணர்ந்து

கொள்ளலாம்,

திருக்கோளிலியிறைவனை வணங்கிப் பசவும் திருஞான சம்பந்தப்பிள்ளையார், அவ்வூர்ப் பெருமான் நமிநந்தியடி களுக்கு அருள் புரிந்த திறத்தை,

தாவியவ னுடனிருந்தும் காணுத தற்பசனே ஆவி தனி லஞ்சொடுக்கி அங்கனனென் ருதரிக்கும் நாவியல் சீர் நமிநந்தி யடிகளுக்கு நல்குமவன் கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே

{1-62-6) என வரும் திருப்பாடலிற் போற்றியுள்ளார். இத்திருப் பாடலின் ஈற்றடியினைக் கூர்ந்து நோக்குங்கால் கோளிலிப் பெருமாளுகிய இறைவன் நமிநந்தியடிகளுக்குத் தலைமைச்