பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/959

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 943

சிறப்பளிக்கும் நோக்குடன் பூத்தொழிலமைந்தகோலொன் றினை அருளிய திறம் குறிக்கப்பெற்றுள்ளமை புலகுைம்.

அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்

எனத்திருத்தொண்டத் தொகையிற் போற்றப்பெறுதலால் இவர் அரசரால் அளிக்கப்பெறும் நம்பி என்னும் பட்டத்தினைப் பெற்ருரெனக் கருதவேண்டியுளது. இவரை நம்பிநந்தி என நாவுக்கரசர் போற்றியுள்ளமையும் இக்கருத்தினை வலியுறுத்துவதாகும். இவர் காலத்தில் தண்டியடிகள் நாயனரும் திருவாரூரில் திருப்பணி புரிந்திருந்தார் என்பதனைச் சேக்கிழாரடிகள் இவரது வரலாற்றிற் குறிப்பிடுதலால் இவ்விருவரும் ஒரு காலத்தவர் என்பது நன்கு விளங்கும்.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனுள்

' வம்பரு வரிவண்டு மண நாற மலரும்

மதுமலர் நற் கொன்றையான் அடியலாற் பேணு எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்” என நம்பியாரூராற் போற்றப்பெற்ற திருஞான சம்பந்தப் பிள்ளை யாரது வரலாறு முன்னர் (பன்னிரு திருமுறை வரலாறு முதற்பகுதி 49-135ஆம் பக்கங்களில்) விரிவாக ஆராய்ந்து விளக்கப்பெற்றது.

ஏயர்கோன் கலிக்காம நாயஞர்

சோழநாட்டில் காவிரி வடகரைக் கீழ்பாலுள்ள திருப் பெருமங்கலம் என்னும் பதியில் சோழமன்னர்க்குச் சேனுபதித் தொழில்பூண்ட பொன்னிநாட்டு வேளாண்மை யிற்சிறந்த ஏயர்கோக்குடியில் தோன்றியவர் கலிக்காமஞர் ஆவர். சிவபத்தியிலும் அடியார்பத்தியிலும் சிறந்த இவர் மானக்கஞ்சன்ற நாயனுசது மகளை மணந்துகொண்ட செய்தி முன்னர் விளக்கப்பெற்றது. ஏயர்கோன் கலிக்காம நாயனர் திருப்புன்கூர்ப்பெருமானுக்குப் பல திருப்பணிகள் புரிந்தார். நிதியமாவன நீறுகந்தார் கழல் என்று சிவபெருமானைத் துதியினுற் பரவித்தொழுது இன்புறுந் தன்மையராய் வாழ்ந்தார். அங்கனம் வாழும் நாளில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிவபெருமானைப் பரவையாரிடத்