பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/982

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

966

பன்னிரு திருமுறை வரலாறு


தார். வேலையாட்கள் பெருகித் தம்மைக் கூலிக்கு அமர்த் திக்கொள்வார் இல்லாமையால் வீடு முதலிய பொருள்களை விற்றும் முடிவில் தம் மனைவியாரை விற்பதற்கு நகரெங்கும் விலே கூறி வாங்குவாரில்லாமையால் மனந்தளர்த்தார். திருவிளக்கேற்றும் வேளையில் ஒற்றியூர்த் திருக்கோயிலை அடைந்து திருவிளக்குப் பணி தடைப்படின் இறந்து படுவேன் எனத்துணிந்து, திரியிட்ட அகல்களைப் பரப்பி வைத்து எண்ணெய்க்கு ஈடாகத் தமது உதிரத்தையே நிறைத்தற்குக் கருவி கொண்டு தமது கழுத்தை அரிந்தார். அந்நிலையில் அருட்கட லாகிய சிவபெருமான் விடைமீது தோன்றியருள, உடம்பின் ஊறு நீங்கித் தலைமேற் கை குவித்து வணங்கி நின்ருர். சிவபெருமான் அவரைப் பொற்புடைய சிவபுரியிற் பொலிந்திருக்க அருள்புரிந்தார்.

சத்தி காயனர்

சோழநாட்டில் வரிஞ்சையூரில் வேளாண் மரபில் தோன்றியவர் சத்தி நாயஞர். சிவனடிக்குத் தொண்டு புரியும் இவர், சிவனடியார்களை யாரேனும் இகழ்ந்துரைப் பாராயின் அக்கொடியோரது நாக்கை அறுத்தற்கென எப்பொழுதும் கையிற் கத்தியுடன் இருப்பவர் ஆதலாற் சத்தியார்’ என அழைக்கப் பெற்ருர். இவர் அடியார்களே அவமதித்துத் தீமொழி புகன்ற தீயோர் தாக்கினைக் குறட் டாற் பற்றி இழுத்துக் கையிலுள்ள கத்தியினுல் அரித லாகிய ஆண்மைத் திருப்பணியை நெடுங்காலம் அன்பி ைேடு செய்திருந்து சிவபெருமான் திருவடியை அடைந் தாா.

ஐயடிகள் காடவர்கோன் காயனர் பதினெராந் திருமுறையாசிரியர்களுள் ஒருவரும்

பல்லவவேந்தரும் ஆகிய இவரது வரலாறு இந்நூலில் (544-555ஆம் பக்கங்களில்) முன்னர் விளக்கப்பெற்றது.

கணம்புல்ல காயஞர்

வடவெள்ளாற்றுத் தென்கரையிலே அமைந்த இருக்கு வேளூரிலே அவ்வூர்க் குடிமக்களுக்குத் தலைவராய் விளங்கி