பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/987

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 97;

எங்கும் பறையறைவித்தார். அருள் வேந்தராகிய இவர் தண்ணளியால் நெடுங்காலம் திருநீற்றின் ஒளிதழைப்ப அரசுபுரிந்திருந்து சிவபதம் அடைந்தார்.

செருத்துணை நாயஞர்

சோழ நாட்டின் அகநாடுகளுள் ஒன் ருகிய மருகல் நாட்டைச் சேர்ந்த தஞ்சாவூரிலே வேளாளர் குலத்திலே தோன்றியவர் செருத்துணையார். இறைவன் திருவடியில் மெய்யன்புடைய சைவராகிய இவர், திருவாரூரை அடைந்து புற்றிடங்கொண்டாரைக் காலந்தோறும் போற்றித் திருத்தொண்டு புரிந்திருந்தார். அங்ங்னம் இருக்கும் நாளில் பல்லவர் கோக்கழற்சிங்கர் உரிமைப் பெருந்தேவி திருக்கோயிற் பூமண்டபத்தின் கீழ் வீழ்ந்து கிடந்த புதுமலரை எடுத்து மோந்ததைக்கண்டு இவள் இறைவர்க்குச் சாத்தும் புதுமலரை மோந்தாள் என்று கொண்டு அவளது மூக்கை அரிந்தவர். இவ்வாறு உறுதிப் பணிபுரிந்து இறைவர் திருவடி நிழல் அடைந்து இறவா இன்பம் எய்தினர்.

புகழ்த்துணை நாயனர்

சோழநாட்டில் அரிசிற்கரைப்புத்துரர் எனவழங்கும் செருவிலிபுத்துTரில் சிவமறையோர்குலத்தில் தோன்றியவர் புகழ்த்துணையார். இவர் சிவாகம விதிப்படி அரிசிற் கரைப்புத்துTரில் இறைவனைப் பூசித்துவந்தார். அக் காலத்திற் பஞ்சம் உண்டாயினமையால் உணவின்றி வாட்டமுற்ற நிலையிலும் எம் இறைவனை வழிபடாது விடுவேனல்லேன் என்னுந் துணிவினராய் அல்லும் பகலும் வழிபட்டு வந்தார். ஒருநாள் இறைவனுக்குத் திருமஞ்சனம் ஆட்டும்பொழுது பசிநோயினுற் கைசோர்ந்து திருமஞ்சனக்குடம் இறைவன் திருமுடிமேல் விழத் திருவடியில் வீழ்ந்து அயர்ந்தார். அப்பொழுது இறைவ னருளால் உறக்கம்வர, இறைவன் கனவிலே தோன்றி பஞ்சம் நீங்கும் வரையும் நாம் நாடோறும் இங்கு ஒவ்வொரு காசு வைப்போம்' என்று அருள் செய்தார். புகழ்த்துணை நாயனர் துயிலுணர்ந்தெழுந்து பெற்றமுகந் தேறுவார் பீடத்தின்கீழ் ஒருகாக இருக்கக்கண்டு அதனைக்