பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/988

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

972

பன்னிரு திருமுறை வரலாறு


கைக்கொண்டு மகிழ்ந்தார். அந்நாள் முதல் எந்நாளிலும் அவ்வாறு ஒவ்வொரு காசுபெற்று இறைவனைப் பூசித்துப் பஞ்சம் நீங்கியபின்னும் நெடுநாட்கள் சிவபெருமானுக்குப் பூசனைபுரிந்து புனிதர் அடிநீழல் சேர்ந்தார்

புகழ்த்துணை நாயனர் அரிசிற்கரைப்புத்துர் இறைவர் பால் நாடோறும் படிக்காசு பெற்று வழிபட்ட இச் செய்தியினை,

அலந்த அடியான் அற்றைக் கன் ருேர் கசசெய்திப் புலர்ந்த காலை மாலை போற்றும் புத்துரரே? (2-63-7) என ஞான சம்பந்தப் பிள்ளையாரும்,

அகத்தடிமை செய்யும் அந்தனன் தான்

அரிசிற்புனல் கொண்டு வந்தாட்டுகின்ளுன் மிகத் தளர்வெய்திக் குடத்தையுதும்

முடிமேல் விழுத்திட்டு வணங்குதலும் வகுத்தவனுக்கு நித்தற்படியும்

வருமென்ருெரு காசினை நின்ற நன்றிப் புகழ்த்துனே கைபுகச் செய்துகந்தீர்

பொழிலார் திருப்புத்துர்ப் புனிதனிரே (7-9-6)

எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் குறித்துப் போற்றி

யுள்ளார்கள்.

கோட்புலி காயஞர்

நலம்பெருகும் சோழநாட்டிலே நாட்டியத்தான் குடியில் வேளாண் குலம் பெருக வந்து தோன்றியவர் கோட்புலி நாயனர். சோழர் சேனுபதியாராகிய இவர், மன்னன்பால் தாம் ஊதியமாகப் பெற்ற பொருளைக் கொண்டு சிவாலயங்களுக்குத் திருவமுதுக்கென கெல்லை வாங்கி நெற்கூடுகளிற் சேமித்து வைக்குத் திருப் பணியைப் பல காலமாகச் செய்து வந்தார்.

இவ்வாருெழுகும் நாளில், அரசனது ஏவலினுல் போர் முனையிற் செல்லும் கோட் புலியார், தம் சுற்றத் தாரை நோக்கி இறைவர்க்கு அமுதுபடி வைத் துள்ள இந்நெல்லை எடுத்தல் கூடாது. திருவிரையாக்கலி என்னும் ஆன எனத் தனித்தனி சொல்லிச் சென்ருச். சில நாளிலே நாட்டிற் கடும் பஞ்சம் வந்தது. பசியால்