பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/989

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 973

வருந்திய சுற்றத்தார்கள் நாம் உணவின்றி இறப்பதைவிட இறைவர்க்கு வைத்த நெல்லைக் கொண்டாகிலும் பிழைத்து உயிர் தாங்கியிருந்து பின்னர்க் குற்றந் தீரக் கொடுத்து விடுவோம்' என்று நெற்கூட்டைத் திறந்து நெல்லைச் செலவழித்தார்கள். அரசனுடைய பகைவரைப் போர் முனையில் வென்று அரசன் பால் நிதிக்குவைபெற்று மீண்ட கோட்புலியார், தம் சுற்றத்தார் செய்த தீமையை யுணர்ந்து அவர்கள் அறியாத வகையில் அவர்களைத் தண்டிக்க எண்ணிஞர். தம் மாளிகையை அடைந்து நம் சுற்றத்தார்க் கெல்லாம் ஆடையணிகலன் கொடுக்க அவர்களை அழைத்து வாருங்கள் என்று அவர்களை உள்ளே அழைத்து அவர் களில் எவரும் ஓடிவிடாதபடி வாயிலிற் காவலனை நிறுத்தி வைத்துச் சிவபெருமானுக்குரிய நெல்லையுண்ட தந்தை, தாய், உடன் பிறந்தார், மனைவி, ஏவலர் முதலிய எல்லோரையும் வாளாற்கொன்று அங்குள்ள குழந்தையை யும் கொல்லத் துணிந்தார். அப்பொழுது வாயில்காவலன் இக்குழந்தை நெல்லினலாகிய அன்னத்தை யுண்டதன்று, ஒருகுடிக்கு ஒரு பிள்ளையாகிய இதனைக் கொல்லாது அருள் செய்யும் என வேண்டினன். இக்குழந்தை இந்நெல் உண்டவளுடைய முலைப்பாலை உண்டது என்று அதை மேலே எடுத்தெறிந்து வாளால் இரு துணியாக விழ ஏற்ருர். அந்நிலையில் சிவபெருமான் அன்பரெதிரே வெளிப்பட்டுத் தோன்றி உன்னுடைய கை வாளால் பிறவிப்பாசம் அறுத்தநின் சுற்றத்தார் பொன்னுலகின் மேலுலகம் புக்கு அணையப் புகழுடைய நீ இந்நிலையே நம்முடன் அணை வாயாக ' என அருள்புரிந்து மறைந்தருளினர் .

கோட்புலி நாயனர் ஆகிய இப்பெரியார், நம்பியா ரூரரைப் பணிந்து தாம்பெற்ற வனப்பகை, சிங்கடி என்னும் பெண்கள் இருவரையும் பணிப்பெண்களாக ஏற்றருளும்படி வேண்ட, நம்பியாரூரர் அவ்விரு பெண் களையும் தம்முடைய பேரன்புக்குரிய மக்களாக ஏற்றுக் கொண்டு தம்மை அப்பெண்களுக்குத் தந்தையெனக் கூறி மகிழ்ந்தமை முன்னர் விளக்கப்பெற்றது.

கூடாமன்னரைக் கூட்டத்து வென்ற கொடிறன் கோட்புலி

(7-15-10) எனச் சுந்தரமூர்த்திசுவாமிகள் கோட்புலியாரது போர்வீரத் தைச் சிறப்பித்துள்ளமை இங்கு நினைக்கத் தகுவதாகும்.