பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/991

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 975

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்

படைத்தல் முதலிய ஐந்தொழில் செய்யும் பிரமன் முதலிய ஐம்பெருங் கடவுளர்களும் இருக்கும் ஐவகைத் தாமரைப் பீடங்களையுடை பதவிகளைக் கடந்து, அட் டாங்க யோகத்துள் இயமம் நியமம் ஆசனம் பிராணயாமம், பிரத்தியாகாரம் என்னும் ஐந்தினையும் பயின்று சித்தத்தை ஒரு வழி நிறுத்தலாகிய தாரணையால், சுயஞ் சோதியாய் உள்ள சிவம் ஞான ஒளி வீசி விளங்கும் நாதாந்தத்தில் சித்தத்தை நிறுத்துதலிளுலே சிவத்தினிடத்தே நிலைபெற்ற சித்தத்தையுடையவர்கள் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் எனப் போற்றப் பெறுவர். இவர்கள் வேத காரணராகிய அம்பலவர் திருவடித் தொண்டின் வழி நின்று அம்முதல்வரை அடைந்தவராவர்.

திருவாரூர்ப் பிறந்தார்கள்

அருவமாயும் உருவமாயும் எல்லாப்பொருளாயும் நின்ற பெருமானும் உமையம்மை மணவாளனும் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் திருவாரூர்த் தலத்திலே பிறக்கும்பேறு பெற்றவர்கள் எல்லோரும் திருக்கயிலை வீற்றிருந்த சிவபெருமான் திருக்கணத்தாராவர். அவர்கள் திருவடிகளை வணங்கி ஒன்றிய மனத்தினையுடையார்க்கு உயர்ந்த வீட்டு நெறி அணிமையுடையதாகும்.

திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லாரும் சிவகண நாதர்கள் என்பதனைச் சிவபெருமான் நமிநந்தியடிகள் நாயனுர்க்குப் புலப்படுத்தியருளிய செய்தி முன்னர்க் கூறப்பெற்றது.

முப்பொழுதுங் திருமேனி தீண்டுவார்

எக்காலத்தும் உயிர்களுக்கு இனிமையே புரிந்தருள் வாராகிய சிவபெருமானது திருவருளிளுலே பெருகி உண்மையான சிவாகம ஞான நெறியின்படி வந்த முறைமை தவருமல் அவ்வக் காலங்கள் தோறும் வழிபாட்டில் ஆசைமிகும் பேரன்புடையராய் நாள்தோறும் காலை நண்பகல் மாலை என்னும் மூன்று காலங்களிலும்