பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 - - umum-6, pew(pi e-onulf பரிபாடல் - சில செய்திகள் 'பரிபாடல் என்னும் பாவினத்தால் ஆகிய பாக்களின் தொகுதி இந்நூல். அதனால், பரிபாடல் என்பது பெயராயிற்று. இப்பாக்கள் பண்ணமைதியோடு பொருந்தியவை: பத்தியோடு மனமுருகிப் பாடப்பட்டும் பயிலப்பட்டும் வந்தவை; ஒங்கு பரிபாடல்’ என்னும் சீரிய பெரும் புகழை அந்நாளிலேயே பெற்றவை. - - . - பரிபாடலின் பழைமை செந்தமிழ்ச் சிலம்புக்கு உரை வகுத்தவருள் ஒருவரான ஆசிரியர் அடியார்க்கு நல்லார், தம் உரைக்கண், முத்தமிழ்ச் சங்கமும் விளங்கிய வரலாற்றை உரைக்கின்றனர். அவற்றுள் அவர், “முதலுழி யிறுதிக்கண் தென்மதுரையகத்துத் தலைச் சங்கத்து அகத்தியனாரும், இறையனாரும், குமரவேளும், முரஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனும் என்றிவருள் ளிட்ட நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்பர் எண்ணிறந்த பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும், களறியாவிரையும் உள்ளிட்டவற்றைப் புனைந்து” என்று கூறுகின்றனர். இவ்வாறே, கடைச்சங்கத்துப் புலமைச் செங்கோல் நடாத்திய நக்கீரனாரும், தாம் வகுத்த இறையனார் களவிய லுரையுள் கூறுகின்றனர். இவற்றால், 'பரிபாடல்’ என்னும் பாவமைப்பு முதற்சங்க காலத்தேயே எழுந்து சிறந்த தொன்மை யுடையது என்பது விளங்கும். எண்ணற்ற' என்னுஞ் சொல், ஏராளமான பரிபாடற் செய்யுட்கள் எழுந்திருந்த செழுமை யினையும் வலியுறுத்தும், இவற்றை எல்லாம் பெறக் கொடுத்து வைக்காதவராயினேம்; இவற்றின் அமைதியைப் பற்றியும் அறிந்து இன்புற இயலாதவராயினேம். τ இனி, இறையனார் களவியலுரையுள், முதற் சங்கப் புலவருள் ஒருவராகக் கீரந்தையார் உரைக்கப்படுவதும், அவர் பாடியதாக இப் பரிபாடலுள் ஒரு செய்யுள் காணப் பெறுவதும் இதனை அக்காலத்தைச் சார்ந்ததோவென நினைக்கவும் தூண்டலாம். ஆனால், மதுரையும், பரங்குன்றமும், மாலிருங் குன்றமும், வையையும் கொண்ட மதுரை, கடைச் சங்கத்து மதுரையேயாதலின், அந்த நினைப்புப் பொருந்தா தென்பதும் விளங்கும். - - அமைப்பு முறை இனி, தொகுத்து அமைத்து நமக்குக் கிடைத்துள்ள பரிபாடலைக் காணுங்கால், இதன் அமைப்புமுறை நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. காலப்பழைமையை யொட்டியோ,