பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்- செவ்வேள் (9) - 95 வணக்கமும் பிணக்கமும் ஊழாரத் தேய்கரை நூக்கிப் புனல்நந்த காழாரத் தம்புகை சுற்றிய தார்மார்பில் கேழாரம் பொற்ப வருவானைத் தொழாஅ வாழிய மாயாநின் தவறிலை! எம்போலும் - 30 கேழிலார் மாணலம் உண்கோ? திருவுடையார் மென்தோண் மேல்அல்கி நல்கலும் இன்று - வையெயிற் றெய்யா மகளிர் திறமினிப் பெய்ய வுழக்கும் மழைக்கா, மற் றைய? கரையாவெந் நோக்கத்தாற் கைசுட்டிப் பெண்டின் 35 இகலின் இகந்தாளை - அவ்வேள் தலைக்கண்ணி திருந்தடி தோயத் திறைகொடுப் பானைவருந்த லெனவவற்கு மார்பளிப் பாளைக் குறுகலென் றெள்ளிழை கோதைகோ லாக இறுகிறுக யாத்துப் புடைப்ப- 40 ஒருவர் மயிலொருவர் ஒண்மயிலோ டேல, இருவர் வான்கிளி ஏற்பின் மழலை செறிகொண்டை மேல்வண்டு சென்றுபாய்ந்தன்றே, வெறிகொண்டான் குன்றத்து வண்டு; ஆற்றிடத்து வரும் புது வெள்ளமானது, முறையாகப் போதலாலே தேய்ந்த கரையிடத்துள்ள வயிரம் பாய்ந்த சந்தன மரங்களை, அவ் வெள்ளமானது பேர்த்துக்கொண்டுவரும். அக்கட்டைகளின் நறுமணம் சூழ்ந்ததும், தார் விளங்குவதுமான தன் மார்பிடத்தே முத்தாரம் அழகு செய்ய வந்தான், முருகப் பிரான். அங்ங்னம் வந்தானைத் தேவானைப் பிராட்டி தொழுத படி எதிர்கொண்டாள். - "மாயத்தில் வல்லவனே, நீ வாழ்க! நின்பால் ஏதும் தவறில்லை. எம்மைப்போலும் நின்னைப் பிரிந்த துயரத்தால் மேனி வண்ணம் கெட்டாரது நலத்தை உண்கின்றாயோ?” "அழகினை உடையாரான பெண்களின் மென்மை வாய்ந்த தோள்களின் மேலாகப் பொருந்தி அவருக்கு அருளுதலும், இந்நாளிலே கூரிய பற்களை உடையாரான, நின் தன்மை அறியாதவரான அம்மகளிரின் நிலைதான், இனி எப்போது பெய்யும் என்று மழைக்காக ஏங்கியிருக்கும் பசும்பயிரின் நிலையினதாக மாறுவதற்குத் தானோ? ஐயனே, இதனை உரைப்பாயாக' - இவ்வாறு அன்பினால் தன்னிடத்து இளகிவராத வெம்மை யான சுடுநோக்கால், தன் கைவிரலைச் சுட்டிக் காட்டியபடி, மாற்றாளான வள்ளிநாயகியின் காரணமாகத் தன்மேற் பகைத்துப் பேசி அகன்று ೧rುಖ76767 தேவானைப் பிராட்டிக்கு,