பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 - -பரிபாடல் மூலமும் உரையும் மயிர்க்கற்றையில் வண்டினம் மொய்த்து ஆரவாரிக்கக், குளிர்ச்சிதரும் துவர்ப்பொருள் பலவற்றைத் தேய்த்துக் கொண்டு, நீரில் மூழ்கி விளையாடினர் சில பெண்கள். தம் கூந்தலிலுள்ள எண்ணெய்ச் சிக்கு அகலுமாறு அரைப்புப் பொடியிட்டுக் கசக்கினர் சிலர் மாலை, சாந்து, கத்தூரி, அணிகள் ஆகியவற்றை நீரும் அணிபெறுமாறு நீரிடத்திட்டனர் சிலர். அப் புனல் உண்ணாத கள்ளினை அதற்குச் சிலர் ஊட்டினர். ஒள்ளிய வளையணிந்தோரான மகளிரின் முகமும், வளரும் மார்பகமும், கண்ணும் மிகுதியாகச் சிவந்தன. அவர் மேணிவண்ணம் ஒளிபெற்றது. இவ்வகையாகப் புனலிடத்தே நீர்விளையாட் டயர்ந்து விளங்கிய பெண்களின் கூர்மையான மலர்க்கண்கள், வண்டுமொய்க்கும் மணம் பொருந்திய, ஐந்தெனப்படும் சிறந்த மன்மத பாணங்களாகிய மலர்களை, அரத்தால் அராவிக் கூர்மை செய்தாற் போன்று விளங்கின. சொற்பொருள் : இளிவரவு துயரம் நல்லது நன்மை மண்ணல் - சாணையிடல். குரல் - கற்றை. துவர் - துவர்ப் பொருள்கள்; இவை பத்து வகையின. இழைதுகள் - அரைப்புத் துள். மதம் - கத்துரி, நறவு - கள். விரை - மணம். தின்னுதல் - அராவுதல். விளக்கம் : நீராடிக் களைத்த பெண்களின் கண்பார்வை பட்ட இளைஞர்களின் மனம் சிதைந்தது என்பார். அவற்றின் தோற்றம் அராவப் பெற்ற மலரம்புகளின் தோற்றத்தைக் கொண்டன என்றனர். - - கலங்கிய புனல் தண்டித் தண்டின் தாய்ச்செல் வாரும்: 100. கண்டல்தண் தாது திரைநுரை தூவாரும்: வெய்ய திமலின் விரைபுனலோ டொய்வாரும்; மெய்ய துழவின் எதிர்புனல் மாறாடிப் பைய விளையாடு வாரும்; மென் பாவையர் செய்தபூஞ் சிற்றடிசில் இட்டுண்ண ஏற்பார் - 105 இடுவார் மறுப்பார் சிறுகிடையார் - பந்துங் கழங்கும் பலகளவு கொண்டோடி அந்தண் கரைநின்று பாய்வாராய் மைந்தர் ஒளிறிலங்கு எஃகொடு வாள்மாறு உழக்கிக் - களிறுபோருற்ற களம்போல, நாளும் 110 தெளிவின்று தீநீர்ப் புனல்; - - - வாழைத் தண்டுகளை நீரிலிட்டு, விருப்போடு தண்டுக்குத் தண்டு தாவிச்சென்று விளையாடினர் சிலர். தாழைமலரின் குளிர்ந்த பூந்தாதுகளைக் கொணர்ந்து, அலைநுரைகளின்