பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 . . . . . . பரிபாடல் ു உரையும் அருவி உருவின் ஆரமோ டணிந்தநின் திருவரை யகல்ந் தொழுவோர்க்கு - உரிதமர் துறக்கமும் உரிமைநன் குடைத்து, நீலமணியைப் போல விளங்கும் மலைப்பகுதியிடத்தே, படிந்துள்ள மேகங்களுக்கிடையே காணப்படுகின்ற, மாலைக் கதிரவனின் அழகிய செவ்வனப்பினைப் பொருந்திய பூந்துகிலை யும், புனையப்பெற்ற திருமுடியினையும் உடையோனே! பெரிதான மலையிடத்திருந்து இழிந்துவரும், பொன்னையும் மணியையும் தன்னோடு கொண்டு விளங்கும். அருவியின் தன்மையோடு மாறுபட்டாற்போல விளங்கும் திருமாலையினை உடையோனே! கருடப்புள்ளின் உருவைப் பொறித்த அழகிய கொடியைக் கொண்டோனே! வானிடத்து விளங்கி, உலகுக்குத் தன் தண்ணொளியால் அருளைச்செய்யும் பெரிய முழுமதியைப் போன்று, அழகு கொள்ளும்படியாக, அன்பர்க்கு அழகிய குளிர்ந்த கருணையைப் பெற்றோனாக விளங்கும், பகைவர்க்கு அச்சந் தருதலையுடைய சக்கரப்படையினைக் கொண்டுள்ள திருமர்லே! கார்ப் பருவமானது வந்து வாய்த்தலினாலே, பெரிதான வானத்தை இருபுறமும் அழகுசெய்த ஞாயிறும் மதியமும் போன்று தோன்றும், சக்கரமும் சங்கமும் ஆகிய இரண்டையும் இரு கைகளிலும் ஏந்தியவனாக விளங்குவோனே! தொகுதி கொண்ட மின்னல்களைப்போல விட்டுவிட்டொளிரும் மணிகள் பதித்த பொற்பூண்களை அணிந்தோனே! அருவியின் உருவோடு விளங்கும் முத்துமாலை அணிந்தோனே! நின் திருமலையாகிய பரந்த இடத்தைத் தொழுவோர்க்கு, நீ விரும்பித் தங்கும் திருவைகுண்டமும் சிறந்த உரிமையினை உட்ையதாகும். சொற்பொருள் : மணிவரை - கரிய மலை; அழகிய மலையுமாம். மங்குல - மேகம். ஞாயிற்று அணிவனப்பு - ஞாயிற்றின் அழகிய வனப்பு: செம்மையொளி. இறுவரை - பெருமலை. புள் கருடப் புள். அளி கொள்ளல் கருணை சுரத்தல். பருவம் - கார்ப் பருவம். இரு விசும்பு - கார்வானும் ஆம் கருவி - தொகுதி கொண்ட இலங்கும் - விளங்கும். பொலம் - பொன். ஆரம் - முத்தாரம், துறக்கம் - திருவைகுண்டம். - விளக்கம் : கார்வானம் திருமால் மேனிக்கும், மாலைக் காலத்து இருபக்கத்து அடிவானத்தும் விளங்கும் ஞாயிற்றுக்கும் நிலவுக்கும் இருகையிடத்து விளங்கும் சக்கரமும், சங்கமும், மின்னொளிக்குப் பூண்களும், வரைவீழ் அருவிக்கு மாலை யிடத்து முத்தாரம் உவமைகள் ஆகின்றன. இதனால் மழை வரவால் உலகம் தழைத்தலைப்போல, நின்னைத் தொழு தலாலும் உலகம் சிறப்பெய்தும் என்பதாம். -