பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 பரிபாடல் மூலமும் உரையும் நின் குன்றத்தையடைந்து, அச் சிறப்புணவை உண்ணாத விடத்து, அம்மகளிர்கள் குற்றமற்ற தம் காதலர்களின் தோள் நலத்தை அடைய மாட்டார்கள். மணவாழ்வு பெற்றவரும் தம் நாயகரின் முறுவலோடு கூடிய அன்புக் கூட்டத்தைப்பெற மாட்ட்ார்கள். - செற்பொருள் : சென்னி நெற்றி புனையாப்பூ கட்டாத பூ கவரி சார்த்தல் - கவரி வீசுதல் வாரணம் - யானை, சிறப்புணா சிறப்புத் தரும் உணவு. - - - விளக்கம் : யானையைப் புனைந்து போற்றி வழிபடுகின்ற மரபு இது அதனை வழிபட்டு அது உண்டு எஞ்சிய எச்சிலைச் சிறப்புணவாகக் கொள்பவர் தம் காதலைப் பிரியாதே வாழ்வார். என்பதும், பிரிந்தவர் மீளப்பெற்று இன்புறுவர் என்பதும், அக்கால மதுரை மகளிர் நம்பிக்கை - தொழுது ஏத்தினேம்! . குறப்பினாக் கொடியைக் கூடியோய்! வாழ்த்துச் சிறப்புணாக் கேட்டி செவி; - உடையும் ஒலியலும் செய்யை,மற் றாங்கே படையும் பவழக் கொடிநிறம் கொள்ளும்; உருவும் உருவத்தீ ஒத்தி, முகனும் விரிகதிர் முற்றா விரிசுடர் ஒத்தி 100 எவ்வத்து ஒவ்வா மாமுதல் தடிந்து - தெவ்வுக் குன்றத்துத் திருந்துவேல் அழுத்தி அவ்வரை உடைத்தோய்! நீஇவ்வரை மருங்கில் கடம்பமர் அணிநிலை பகர்ந்தேம், - - உடங்கமர் ஆயமொடு ஏத்தினம், தொழுதே! 105 பூங்கொடி போன்றாளான குறக்குலப்பெண்ணாம் வள்ளி நாயகியைக் கூடி மகிழ்கின்ற பெருமானே! நின்னை வாழ்த்தும் எம் குரலையும் நினக்குரிய சிறப்புணவாகக் கொண்டு விரும்பிக் கேடடருள்வாயாக! உடையும், அணியும், மாலையும் செந்நிறமாகக் கொண்ட வனே மற்றும், அவ்விடத்தே நீ ஏந்தியுள்ள வேற்படையும் பவழக் கொடியின் செந்நிறத்தைக் கொண்டிருக்கும். நின்னுருவத்து வண்ணத்தானும் நீ அழகிய செந்தியை ஒத்திருப்பாய். நின் முகமும் கதிர் விரியும் இளஞாயிற்றைப் போன்றிருக்கும். நின்மேற் பகைத்துத் துன்பமுற்றுக் கடலிடையே சென்று உருக்கரந்து நின்ற சூரனாகிய மாவினை வேரோடும் வெட்டியழித்தவனே! பகைத்த கிரவுஞ்சக் குன்றத்திலே நின் செவ்விய வேலினை அழுத்தி, அக்குன்றினை உடைத்தவனே! - - s