பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-வையை (20) r - 191 வையைத் தொழுவத்துத் தந்து அடித்திடித்து 60 மத்திகை மள்லையா மோதி அவையத்துத் தொடர்ந்தேம் எருது தொழில் செய்யா தோட விடுங்கடன் வேளாளர்க் கின்று படர்ந்தியாம் தன்மார்பும் தண்டந் தருமாரத் தாள்மார்பும் - - நின்மார்பும் ஓரொத்த நீர்மையகொல்? என்னாமுன். 65 தேடினாள் ஏசச் சிலமகளிர் மற்றதற்கு ஊடினாா வையை அகதது; சிந்திக்கத் தீரும் பிணியாள் செறேற்க - மைந்துற்றாய் வெஞ்சொல் மடமயிற் சாயலை வந்திக்க வாரென மனத்தக்க நோயிது 70. வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு - போற்றாய்காண் அன்னை புரையோய் புரையின்று மாற்றாளை மாற்றாள் வரவு: - தலைவி சித்தம் திகைத்தவளாக நின்றதும், அவளுடன் வந்த ஆயமகளிருள் ஒருத்தி பரத்தையைப் பலபடியாகப் பழித்துப் பேசுகின்றாள். அதைக் கேட்டு அப் பரத்தை தலைவியைப் பழிக்கின்றாள். அதனைக் கேட்ட முதுபெண்டிருட் சிலர், 'கற்புடையாளை இகழாதே அவளை வணங்கிப் போற்றுக’ என்கின்றனர். அவளோ, மாற்றாளை வணங்கல் உயர்வன்று' என்று, உண்மையைக் கூறி, அமைகின்றாள். - தலைவி சித்தம் திகைத்து நின்றதைக் கண்டனர். அவளைப் பழித்த பரத்தையின்மேல் தலைவியினுடன் வந்தாரான ஆயமகளிர்க்குப் பெருத்த சினம் உண்டாகிறது. அவர்களுள் ஒருத்தி அவளை நோக்கி ஏசத் தொடங்குகிறாள்: - - "விரும்பத்தகுந்த காமவின்பத்தை, மயக்கும் பொய்ம் மொழிகளோடு சேர்த்துக் காட்டி ஆடவரை மயக்கும் விலை மகளே! பெண்மையை ஒருவனுக்கு உரியதாக்கி உயர்வாழ்வு வாழாதே பலருக்கும் பொதுமையாக்கி விற்றுத் துணைவன் என யாருமே இல்லாதிருப்பவளே! ஐம்புலத்திற்கும் இன்பந்தருவதான காமவின்பத்தை நுகரும் காமுகராகிய பன்றிகள் உண்பதற்குரிய தாய் விளங்கும், இரண்டு இதழ் அமைந்த வாய்த்தொட்டியைக் கொண்டவளே! - "முதிராத நல்ல கள்ளினை மிகுதியான நீரினைப் பெய்து கலக்கிக், களிப்புத்தரும் காமக் கலப்பையிலே, எம் தலைவனாகிய எருதைக் கட்டி, அது சற்றும் அயராதபடி முடுக்கிப்படியே யிருக்கும் முதுசாடியே! "இளமையும் களிப்பும் மையுண்ட செவ்வியும் பொருந்திய நின் கண்களின் நோக்கினைக் கயிறாக வைத்து, ஆண்களுடைய