பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-பாடிய சான்றோர்கள் 241 தமிழகத்துப் பண்டைய மக்களிடையே வளையணிதல் ஒரு மங்கலவழக்காகத் திகழ்ந்தது. பெண்கள் கைவளைகளை மங்கல அணியாகக் கொண்டு போற்றினர். கணவரை இழந்தோர் அவற்றை உடைத்து எறிந்து கைம்மை பூண்டனர். இதனை மதுரையைவிட்டு வெளியேறிய கண்ணகி தேவி, கொற்றவை வாயிலில் தன் பொற்றொடியைத் தகர்த்துச் சென்றதனால் அறியலாம். இவ்வாறே ஆடவரும் தோள்வளைகள் என்னும் வீரவளைகளை அணிந்து இன்புற்றனர். பொற்றொடி அணிதற் கேற்ற வாய்ப்பற்ற எளியோர்க்குச் சங்கு வளைகளே அழகையும் மகிழ்வையம் தந்துவந்தன. இக்குடியினர் மிகப் பெரும்பான். மையராகத் தமிழகத்து வாழ்ந்தனர். இங்கிருந்து இத்தொழிலைச் செய்துவந்தாரோடு கலந்து நாளடைவில் இக்கலப்பு மாந்தர் ஒரு தனிக்குடியினராகவும் விளங்கினர். இவர்கள் பெயரால் விளங்கும் மதுரை மாவட்டத்துக் கீரனூரும், புதுக்கோட்டை மாவட்டத்து கீரனூரும், தஞ்சை மாவட்டத்துக் கீரமங்கலமும் இதனை வலியுறுத்தும். - - காலப்போக்கில் இவ்வாறு கலந்துவிட்ட இவ்வினத்தார், தமக்கு வாழ்வளித்த தமிழகத்தின்பால் அன்புற்றுத் தமிழ் மக்களாகவே தங்களை முற்றவும் மாற்றிக் கொண்டனர். தமிழ் மொழியைக் கற்றும் பேசியும், தமிழ் வாழ்வோடு தாமும் இரண்டறக் கலந்துவிட்டனர். இதனைக் கடைச்சங்கத்து. விளங்கிய நக்கீரர், கணக்காயனார் போன்ற பெரும் புலவர் களையும், பிறரையுங் கொண்டு அறியலாம். மேலும் சங்கப் புலவர்களாக 24 பேர்கள் இக்குடியினராகக் காணப்படுகின்றனர் என்பதும், இவர்கள் தமிழ்மக்களாகவே விளங்கிய வாழ்வியல் நன்மாற்றத்தைக் காட்டும். - இவர்கள் வாழ்வியலை ஒத்த வாழ்வியலைக் கொண்டிருந் தோரான பாண்குடியினரோடு இவர்கள் கலந்தனராதல் பொருந்தும். இதனாற் பாண்குடியினரின் தமிழ்க்கலைகள் பலவற்றையும் இவர்களும் கற்றுச் சிறந்தனர். சங்கறுக்கும் தொழிலைப் பண்டு செய்துவாழ்ந்த தமிழ்க்குடியினரோடும் இவர்கள் கலந்திருக்கலாம். இக் குடியினரின் வழியின்ர் சங்கம் பண்டாரங்களாக இன்றும் தென்தமிழ்நாட்டுப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இக் கீரர் குடியினரின் வழியினரும், தமிழகப் பார்ப்பனக் குலத்தவருள் யாதோ ஒரு பிரிவினராக இன்றும் எங்கோ விளங்கி வருகின்றனர் எனலாம். கீர் கீர்’ எனச் சங்கினை அறுக்கும்போது எழுந்த ஒலியினாலே, இவர்கள் கீரர்’ எனப் பெற்றனர் என்பார்கள். இஃதுண்மையாயின், இப்பெயர் இவர்க்குத் தமிழகத்தார் இட்டு வழங்கிய தமிழ்ப் பெயர் என்றே கொள்ளல் வேண்டும். .