பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 - - பரிபாடல் ഋഗ്വെ உரையும் காலத்தால் இவர்கள் தமிழராகவே மாறிவிட்ட போதிலும், தங்கள் மூதாதையராற் சொல்லறப்பட்டுக் கேட்ட றிந்த பழங்கதைகளையும், கொள்கை கோட்பாடுகளை யும் இவர்கள் முற்றவும் மறந்துவிடவில்லை. அவற்றைத் தங்கள் செய்யுட்களின் இடையே பெய்து வைத்தும் இன்புற்றனர். என்பதனை, இப் புலவர் பாடிய பரிபாடற் செய்யுளால் அறிகின்றோம். திருமாலைப் பற்றிய இவரது பரிபாடல், உலகத்தின் - தோற்ற முறையைப்பற்றிய தத்துவக் கோட்பாடுகளையும், அந்தணர் திருமாலை யாகத்தீயின் சுடரிடைக்கண்டு வழிபடும் மரபினையும் காட்டுகின்றது. எம் அறிவு கொடும்பாடு அறியற்க’ என வேண்டுகின்றார் இவர் அறிவிலே எழுகின்ற கொடுமை யான எண்ணங்களே செயல்களாக உருப்பெற்று மக்களிடையே பூசல்களையும், பொறாமைமையும், பிறபிற வேறு பாடுகளையும் வளர்க்கின்றன. அறவாழ்வினராக வாழ்வதற்கு நினைப்போர் முதற்கண் தம் அறிவைக் கொடும்பாடு அறியாத நல்லறிவாகத் தூய்மை செய்துகொள்ளல் வேண்டும். இந்த அரிய உறுதிப்பாட்டை மிகவும் நயமாகக் கூறியுள்ளார் இப்புலவர் பெருந்தகை. இதனால், இவர் அறவாழ்வு வாழ்ந்து, கற்றோரும் மற்றோரும் போற்றப் புகழாற் சிறந்திருந்த தகுதியினர் எனக் கொள்ளலாம். - - கடுவன் இளவெயினார் - 3,4,5 - இவர் 'கடுவன்’ என்னும் இயற் பெயரினர். இதனைக் கடுவன் மள்ளனார் எனவும். கடுவன் இளமள்ளனார் எனவும் வரும் பெயர்களும் காட்டும். இச்சொல் கடுமையும் வன்மையும் கொண்டவர் என்ற பொருளைத் தந்து, ஒருவரின் மறமேம் பாட்டை விளக்கவதும் ஆகும். இதனைப் பூனையினத்துள் ஒன்றைக் கடுவன்’ என வழங்கும் வழக்காறும், புலியினத்துள் ஒன்றைக் கடுவாய்' என வழங்கும் வழக்கும், விரைந்து பரவும் ஒருவகைப் படையினைக் கடுவன்’ எனக் குறிப்பிடும் வழக்கும் உணர்த்தும். எயினனார் என்பது இவர் வேட்டுவச் சாதியினர் என்பதனையும், இள' என்பது எயினனார் என்பாரின் இளவல் என்பதனையும் காட்டுவனவாம். - எயினர் என்போர் வேட்டுவக் குடியினர் ஆவர்; இவர் மலைவாழ் சாதியினர் ஆதலும், குறிஞ்சி முல்லை ஆகிய பகுதிகளிலே வேட்டையாடி வாழ்ந்தோராதலும் பொருந்தும், இவர்களுடைய வேட்டைத்திறன், காலப்போக்கில், நாகரிகம் வளரவளர, இவர்களைத் தமிழ் மன்னர் படையணிகளுட் சிறந்த காவன் மறவராகத் திகழுமாறு உயர்த்திற்று. எயில் என்னும்