பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 - w பரிபாடல் மூலமும் உரையும் தண்ட மிரண்டும் தலைஇத் தாக்கி நின்றவை ஒன்றியும் உடம்பாடு ஒலியெழுதற் கஞ்சி நின்ற நிகழ்ச்சியும் போன்ம் - - என, மன்னர் வேறுபாட்டால் பொருத எதிர்ப்பட்டு, மனிதாபி மானத்தால் தயங்கி நிற்கும் படைமறவர் நிலையினையும். கள்ளொடு காமங் கலந்து கரைவாங்கும் வெள்ளந் தருமிப் புனல் - - எனப் புனலினால் மக்கள் கொண்ட களிப்பின் மிகுதியையும் கூறுவார் இவர். இல்லது நோக்கி இளிவரவு கூறாமுன் நல்லது வெஃகி வினை செய்வார் ஆகிய மக்களையும் இவர் செய்யுளுட் சந்திக்கின்றோம். இலம்படு புலவர் ஏற்றகை ஞெமரப் பொலஞ்சொரி...... - - - - - வழுதியையும் கண்டு விய்க்கின்றோம். இவ்வாறு பல செய்திகளையும் சொல்லும் இவரது இப்பாடல் அக்கால மதுரைமா நகரத்து வாழ்வியலின் ஒரு சிறந்த ஒவிய விளக்கம் ஆகும். - - நல்லழுதியார் - 12 இவர் வையை பற்றிய இப்பாடலைப் பாடியவர். இவர் பெயரமைதியால், இவரைப் பாண்டியர் குடியினர் என்ற கருதலாம். மன்னர் மரபினரேனும், மாண்புற்ற செழுந்தமிழ்ப் புலமையால் சிறப்புற்றும் விளங்கியவர் இவா. இதலை. இப் பரிபாடலால் அறியலாம். - * மதுரைநகரைச் சுற்றி மதிலொன்று இருந்த செய்தியையும், வையைப் புனல் அம்மதிலைப் பொருதிச் செல்லும் நிலையையும், வந்து மதுரை மதில்பொருஉம் வான் மலர்தாய் அந்தண் புனல் வையை யாறு - எனக்கூறுகின்றனர். இவர். புதுப்புனலாடச் செல்லக் கருதிய மக்களின் செயற்பாடுகளை யெல்லாம் மிகமிக நுட்பமாக இவர் எடுத்துரைக்கின்றனர். - - உரைதர வந்தன்று வையை நீர்; வையைக் கரைதர வந்தன்று காண்பவர் ஈட்டம்; நிவந்தது நீத்தம் கரைமேலா; நீத்தங் கவர்ந்தது போலுங் காண்பவர் காதல் என வையைப் புனல்வரவைச் சொல்லோவியப்படுத்தி நம் கண்முன்னர்க் காட்டும் திறனைப் பெற்றவர் இவர் ஆவர்.