பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i பதிப்புரை . “பரிபா டல்லே தொகைநிலை வகையின் இதுபா స్ట్రో இயல்நெறி இன்றிப் பொதுவாய் நிற்றற்கும் உரித்தென மொழிப் . . . ... ', (தொல்.செய். 425) என்று தொல்காப்பியம், பரிபாடல் என்றால் என்ன என்று கூறுகிறது. பரிபாடலாவது தொகைநிலை வகையால் பா இஃது என்று சொல்லப்படும் இலக்கணம் இன்றி எல்லாப் பாவிற்கும் பொதுவாய் நிற்றற்கும் உரியதென்றுசொல்லுவர் இலக்கணச் சான்றோர் என்று தொல்காப்பியம் கூறுகிறது. - . . . வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாடல்களுக்கும்; பலவகை அடிகளுக்கும் பரிந்து இடம் கொடுத்துப் பரிந்து செல்லும் ஓசையை உடைய பரி பாட்டுகளின் தொகுப்பாக விளங்குவதனால் இது "பரிபாடல்" என்னும் பெயரினைப் பெற்றுள்ளது. . இது இருபது அடிகள் முதல் நானூறு அடிகள் வரை பெற்று விளங்கும். : "பரிபாடற்கண் bణు: யாறும் ஊரும் வருணிக்கப்படும்" என்று இளம்பூரணரும்; . - "அறம், பொருள், இன்பம், விடென்னும் உறுதிப்பொருள்கள் நான்கனுள் இன்பத்தையே பொருளாகக் கொண்டு, கடவுள் வாழ்த்து, மலை விளையாட்டு, புனல் விளையாட்டு முதலியவற்றில் இப் பாடல் வரும்" என்று பேராசிரியரும்; - - ' "தெய்வ வாழ்த்து உட்படக் காமப்பொருள் குறித்து உலகியலே பற்றி வரும்" என்று நச்சினார்க்கினியரும் கூறியுள்ளனர். பரிபாடல் மொத்தம் எழுபது பாடல்களைக் கொண்டது. ஆனால், நமக்குக் கிடைத்துள்ளவை இருபத்திரண்டு பாடல்கள் மட்டுமே. பரிபாடலில் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது நான்காவது பதின்மூன்றாவது, பதினைந்தாவது ஆகிய ஆறு பாடல்களும் திருமாலைப் பற்றியவை. அய்ந்து, எட்டு, ஒன்பது, பதினான்கு, பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது, இருபத்தொன்றாவது ஆகிய எட்டுப்பாடல்களும் செவ்வேளைப் பற்றிப்பாடப்பெற்றவை. ஆறு, ஏழு, பத்து, பதினொன்று, பன்னிரண்டு, பதினாறு, இருபது, இருபத்திரண்டு ஆகிய எட்டுப்பாடல்களும் வையையைப் பற்றிப்பாடப்பெற்றவை. செவ்வேள், திருமால், வையை ஆகிய முப்பொருள்கள் பற்றியும் பதின் மூன்று புலவர் பாடியுள்ளனர்; ஏழு சான்றோர் பண் வகுத்துள்ளனர்.