பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பரிபாடல் ឃ-១យោ எதிராகஎதிராகஎதிரொலிசெய்து ஒலிமுழக்கும்நின் குன்றத்தின் ஒலிமுழக்கமும், மணமுரசுகளின் ஒலியையே எழுப்பும். இவ்வாறு மணமுரசுகளின் ஒலிமுழக்கை உடைத்தாயிருப்பது நின் குன்றம்! .. - சொற்பொருள் : குன்றம் முதலது கிரவுஞ்சம் பின்னது திருப்பரங்குன்றம் மன்றல்-மணவிழா.மால் கடல்-பெருங்கடல் . கருங்கடலும் ஆம்: மயங்கிய கடலும் ஆம் ஏறு - இடியேறு. விளக்கம் : பெருமான் மணக்கோலத்தோடு வீற்றிருக்கின்ற குன்றமாதலின், அதனின்று எப்போதும் மண முரசுகளின் முழக்கம் எழுந்தபடியேயிருக்கின்றது என்கின்றனர். - - மகிழ் நல்கும் குன்றம் தூதேய வண்டின் தொழுதி முரல்வவர் காதல் மூதூர் மதில் கம்பலைத் தன்று; வடுவகிர் வென்றகண் மாந்தளிர் மேனி - நெடுமென் பனைத்தோள் குறுந்தொடி மகளிர் ஆராக் கர்மம் ஆர்பொழிற் பாயல் 40 வரையகத்து இயைக்கும் வரையா நுகர்ச்சி முழயா நுகர்ச்சி முற்றாக் காதல் - அடியோர் மைந்தர் அகலத் தகலா அலர்ஞெமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி - புலரா மகிழ்மறப் பறியாது நல்கும் - :45 சிறப்பிற்றே தண்பரங்குன்று; - தம்மைப் பிரிந்துறையும் தலைவரிடத்தே, தலைவியர் வண்டுகளைத் தூது விட்டனர். அவ் வண்டுக் கூட்டங்கள் மதுரை அகநகருட் சென்றன. ஊரவர் எல்லாரும் அறியுமாறு' மதுரைப் பழநகருட் சென்ற அவ் வண்டினம், எங்கணும் முரல்வவாய் ஆரவாரித்தன. இதனால் மதிற்பகுதியிடத்தே பெரிதான அலரும் எழுந்தது. குறிப்பிட்ட தலைவர்களும் தம்மை உணர்ந்தனர். - * - “மாவடுப் பிளப்பினையும் உருவமைதியால் வெற்றி கொண்ட கண்கள்; மாந்தளிரைப் போனற் ஒளிவிளங்கும் பொன்மேனி, நெடிய மென்மைவாய்ந்த மூங்கிலனைய தோள் கள்; இத்தகையவர் சிறுவளை அணிந்தோரான நம் காதல் மகளிர்” என்று கூறியவராக, அவர்கள், தத்தம் காதலியரை நினைந்தனர்.அவர்களைச் சந்திக்கக் கருதியவராகப் பரங்குன்றின் சோலைப்பகுதிகளுக்கும் விரைந்தனர். அங்கே அவர்கள் - பிரிந்தவர்கள் கூடினர்; இன்புற்றனர். இவ்வாறாக, அமையாத காமவின்பத்தைக் காதலர் நுகர்ந்து இன்புறுதற்குரிய இடமாக விளங்கிய பரங்குன்றத்துச் சோலையாகிய பாயலானது, பிரிந்துறைந்த அக் காதலரை