பக்கம்:பறவை தந்த பரிசு-2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
15

தாள். அவள் முத்துமணிக்கும் மற்ற குழந்தைகளுக்கும் ஆனா ஆவன்னா கற்றுக் கொடுத்தாள். ஒன்று இரண்டு நூறுவரை சொல்லிக் கொடுத்தாள். படங்களைக் காட்டிக் காட்டிப் பாடம் சொல்லிக் கொடுத்தாள். 'நிலா நிலா வா வா’ என்பது போன்ற அழகான பாட்டுக்கள் எல்லாம் சொல்லிக் கொடுத்தாள். நல்ல விளையாட்டெல்லாம் பழக்கி வைத்தாள்.

பள்ளிக்கூடம் நன்றாக இருந்தது. முத்துமணி நாள் தவறாமல் பள்ளிக்கூடம் போய் வந்தாள். முத்துமணியுடன் பச்சைமணி என்ற ஒரு சிறுமி படித்து வந்தாள். அவளும் குழந்தைகள் வகுப்பில் தான் படித்தாள். முத்துமணியும் பச்சைமணியும் வகுப்பில் பக்கத்தில் பக்கத்தில் இருந்தார்கள். அதனால் அவர்களுக்குள் நட்பு வளர்ந்தது. இரு வரும் சேர்ந்தால் பேசிக்கொண்டிருப்பார்கள். ஒன்றாக விளையாடுவார்கள்.

முத்துமணி ஒவ்வொரு நாளும் நல்ல நல்ல சட்டையும் பாவாடையும் அணிந்துகொண்டு போவாள். தங்கம்மாள் அவளுக்குப் புதுப்புது மாதிரியாகச் சடை பின்னி அழகுபடுத்தி அனுப்புவாள்.

பச்சைமணியின் பெற்றோர் ஏழைகள்.

அவள் எப்பொழுதும் பழைய சட்டையும் பாவாடையும்தான் அணிந்து வருவாள். அவை சில இடங்களில் கிழிந்துபோய் ஒட்டுப்போட்டுத் தைத்திருக்கும்.