பக்கம்:பறவை தந்த பரிசு-2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

கேட்டது. கந்தனைக் காணவில்லை. அவனைத் தேடிக் கொண்டு புறப்பட்டாள். காட்டில் அவளுக்குப் பாதையே தெரியவில்லை.

திடீரென்று அவள் தன் கையில் காப்புகள் இல்லாததைக் கவனித்தாள். பிறகு சங்கிலியும் தோடும் காணாமல் போனதையும் அறிந்து கொண்டாள். கந்தன்தான் அவற்றைக் திருடிக் கொண்டு தன்னைக் காட்டில் விட்டுவிட்டுப் போயிருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.

அவளுக்குப் பசியெடுத்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை.

பெற்ற அம்மா எங்கே இருக்கிறாளோ; எப்படி இருக்கிறாளோ; அவளைக் கண்டு பிடிக்க முடியுமோ; முடியாதோ? என்றெல்லாம் நினைத்த போது அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது.

அப்போது அந்தப் பக்கமாக ஒரு பச்சைக்கிளி பறந்து வந்தது. முத்துமணி அழுது கொண்டிருந் ததைப் பார்த்து அதற்கு இரக்கமாக இருந்தது.

"பாப்பா...பாப்பா ஏன் அழுகிறாய்?"என்று கேட்டது பச்சைக்கிளி.

"என்னைப் பெற்ற அம்மா தவிட்டுக்கு விற்று விட்டாள். நான் அவளைத் தேடிக் கொண்டு புறப்பட்டேன். கூட வந்த கந்தன், என் நகைகளைத்